பிரபல நடிகை ஒருவர் அதிகம் பரீட்சையும் இல்லாத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களிலேயே இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகும் நடிகை சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இப்போது 36 வயதாகும் நடிகை இளமையான தோற்றத்துடன் வலம் வருகிறார். அதனால் தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் நடிகை இருந்து வந்தார்.
எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகத்தான் சென்று வந்தார்கள். ஆனால் இருவருமே தங்களது உறவு முறையை வெளிப்படையாக சொல்லவில்லை. இந்த சூழலில் நடிகையின் முதல் கணவர் தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இப்போது இந்த 36 வயது நடிகையின் ரூட் கிளியர் ஆகியுள்ளது.
அதாவது நடிகை காதலித்து வந்த நடிகரை விரைவில் மணம் முடிக்க உள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் அந்த நடிகரும் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் தான். தற்போது 46 வயதாகும் அந்த நடிகர் ஏதாவது ஏடாகிடமாக பேசி சர்ச்சையில் சிக்க கூடியவர்.
அந்த நடிகருக்கு பிரபல நடிகை உடன் பிரேக்கப் ஆன நிலையில் தற்போது இந்த விவாகரத்து நடிகையை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மேலும் இருவருக்குமே முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில் இரண்டாவது திருமணமாவது நீடிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.