சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக பலரையும் கிறங்கடித்தவர் தான் அந்த நடிகை. அழகான சிரிப்பும், துருதுரு நடிப்பும் என முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்த அவர் புகழின் உச்சியில் இருக்கும் போதே திடீரென காணாமல் போனார். அதன் பிறகு அப்படி ஒரு நடிகை இருக்கிறார் என்பதையே பலரும் மறந்து விட்டனர்.
சில வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுக்க வந்த நடிகையை பார்த்த பலரும் அதிர்ச்சியாக பார்த்தனர். அழகும் இளமையும் என ஜொலித்த அந்த நடிகை மிகவும் சோர்ந்து போய் பரிதாபமாக இருந்தார். அவருக்கு என்னதான் ஆனது என்று பலரும் விசாரித்ததில் பல திடுக்கிடும் விஷயங்கள் கிடைத்தது. அதாவது அந்த நடிகைக்கு எளிதில் தீர்க்க முடியாத கொடிய வியாதி ஒன்று இருந்திருக்கிறது.
அதற்காக பல வருடங்கள் சிகிச்சை பெற்று வந்த அந்த நடிகை பக்கவிளைவினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதன் காரணமாகவே அவருடைய எடை 100க்கும் அதிகமாக ஏறி இருக்கிறது. இதனால் அவதிப்பட்டு வந்த அந்த நடிகை கொஞ்சம் கொஞ்சமாக தன் உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு வந்தார்.
ஆனாலும் அவருக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் காரணமாகவே நடிகை இப்போது 42 வயதான நிலையிலும் திருமணமே செய்து கொள்ளாமல் தனி மரமாக நிற்கிறார். இது பற்றி யாரும் கேட்டால் கூட எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று நாசுக்காக சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார்.
ஆனால் உண்மையில் நடிகைக்கு குடும்பம், குழந்தை என்ற ஆசை இருந்தும் உடல் ரீதியாக அவரால் அந்த வாழ்வில் ஈடுபட முடியவில்லை என்பதுதான் சோகம். ஆனாலும் துவண்டு போகாத அந்த நடிகை இப்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். மேலும் இன்று புகழின் உச்சியில் இருக்கும் பல நடிகர்களுக்கும் ஜோடியாக அவர் நடித்திருக்கிறார்.
ஆனால் ரீ என்ட்ரியில் அவர்களுக்கே அம்மா, அக்கா வேடங்களில் அவர் நடித்தது தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் பிறகு சின்ன திரையிலும் அவர் ஒரு ரவுண்டு வந்தார். இப்போது அவர் பெரிய அளவில் நடிக்காவிட்டாலும் கிடைக்கும் ஒன்றிரண்டு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த பிரச்சனையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள அவர் முழு நேர ஆன்மீகவாதியாக மாறிவிட்டதாகவும் ஒரு தகவல் காத்து வாக்கில் பரவி வருகிறது.