கல்யாணமான ஹீரோக்களுடன் இருந்த உறவு.. காதல் கோட்டை சரிந்ததால் சிங்கிளாக இருக்கும் 50 வயது ஆன்ட்டி நடிகை

இப்போதெல்லாம் கல்யாணம் பண்ணாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவது ஃபேஷன் ஆகிவிட்டது. அப்படித்தான் 50 வயது ஆன்ட்டி நடிகை ஒருவர் கல்யாணம் என்றாலே ஆளை விடுங்கடா சாமி என தெறித்து ஓடுகிறார்.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய வாழ்க்கையில் இருந்த காதல் கோட்டைகள் சரிந்து போனது தான். கோலிவுட்டில் ஒரு சில படங்களில் தலைகாட்டி ஃபேமஸான இந்த நடிகை அக்கட தேசத்திற்கு சென்றார். அங்கும் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

அதேபோல் ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நடிகருடன் காதல் உறவிலும் இருந்தார். ஆனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நடிகரின் இரண்டாவது மனைவி எனக்கே போட்டியா என பத்திரகாளி ஆக மாறி இருக்கிறார். இதனால் ஆன்ட்டி நடிகையின் காதல் தோல்வியில் முடிந்திருக்கிறது.

அதை அடுத்து பாலிவுட் பக்கம் சென்ற நடிகை அங்கும் ஒரு திருமணமான நடிகரை காதலித்தார். ஆனால் நடிகையைப் பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த அந்த நடிகரின் மனைவி இந்த காதலை ஆரம்பத்திலேயே வெட்டி எறிந்து விட்டார். இப்படி நடிகைக்கு காதல் என்றாலே அலர்ஜியாகி விட்டதாம்.

அதனாலயே ஐம்பது வயதை தாண்டிய நிலையில் அவர் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். ஆனால் இப்போது அவர் மீண்டும் பாலிவுட் நடிகருடன் உறவை புதுப்பித்து விட்டாராம். ஆனால் இந்த முறை நடிகரின் மனைவியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த விவகாரம் தான் இப்போது பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →