சோசியல் மீடியா பிரபலமாக ஆரம்பித்ததில் இருந்தே ஒவ்வொருவரின் நடவடிக்கையும் உடனுக்குடன் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. சாதாரண மக்களே இப்படி என்றால் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களை சொல்லவா வேண்டும்.
அந்த வகையில் தற்போது சோசியல் மீடியாவையே ஒரு ஜோடி கலக்கி கொண்டிருக்கிறது. சமீபத்தில் திருமணமான இவர்கள் இருவரும் தற்போது தங்கள் காதல் கதையை வெளிப்படையாக கூறி வருகின்றனர். இவர்களுடைய திருமண அதிர்ச்சியிலிருந்தே வெளிவராத ரசிகர்கள் இந்த ஜோடி அடிக்கும் லூட்டியை பார்த்து கடுப்பாகி இருக்கின்றனர்.
ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி அது விவாகரத்தில் முடிந்தது. அந்த நடிகைக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது இந்த தயாரிப்பாளரை அவர் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இரண்டாம் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் தவறான செயல் கிடையாது.
ஆனால் இவர்கள் இருவரும் முதன்முதலாக திருமண பந்தத்திற்குள் நுழைவது போன்று கொடுக்கும் அலப்பறை தான் ரசிகர்களை விமர்சிக்க வைத்துள்ளது. ஏற்கனவே பல கசப்பான விஷயங்களில் இருந்து மீண்டு வந்திருக்கும் இந்த ஜோடி கொஞ்சம் அடக்கி வாசிக்காமல் ஓவராக சீன் போட்டு வருகின்றனர்.
இதுதான் தற்போது வரும் மோசமான விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இது நீடிக்குமோ என்றும், சீக்கிரமே விவாகரத்தில் தான் முடிய போகுது என்றும் பல விமர்சனங்கள் அந்த ஜோடிகளுக்கு எதிராக வந்து கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் இந்த ஜோடி தற்போது நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், பலரும் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.