வசமாக சிக்கிய இயக்குனர்.. நிம்மதி பெருமூச்சு விட்ட வாரிசு நடிகரின் குடும்பம்

வாரிசு ஹீரோ ஒரு படத்தில் நடிக்க அவரது உறவினர் படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடையே பிரச்சனை நடைபெற்றது. பல வருடங்கள் ஆகியும் விடாது கருப்பு போல் அந்த பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

மேலும் இயக்குனர் அந்த படத்தால் தான் பல கோடி நஷ்டத்தை சந்தித்ததாக கூறியிருந்தார். ஏனென்றால் தயாரிப்பாளர் பாதியோடு அந்தப் படத்தை தயாரிப்பதை நிறுத்திக் கொண்டதால் இயக்குனர் சொந்த காசை போட்டு எடுத்தாராம். இந்த பிரச்சனை சமீபத்தில் பூதாகரமாக வெடிக்க இயக்குனருக்கு சப்போட்டாக அவரது நண்பர்கள் மற்றும் இயக்குனர்கள் பேசி வந்தனர்.

இதனால் தயாரிப்பாளரும் அந்த வாரிசு குடும்பமும் சினிமா வட்டாரத்தில் அசிங்கப்பட்டனர். ஒருவழியாக எப்படியோ மன்னிப்பு கேட்ட இந்த பிரச்சனையை மூடி விட்டாலும் அவர்கள் விட்ட சாபத்தால் பெரிய பிரச்சனையில் இப்போது இயக்குனர் மாட்டிக் கொண்டிருக்கிறார். அதாவது இயக்குனரின் நெருங்கிய நண்பர் இப்போது மிகப்பெரிய வழக்கில் சிக்கி இருக்கிறார்.

அதில் இந்த இயக்குனருக்கும் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அந்தக் கடத்தல் விவகாரத்தில் கிடைத்த பணம் மூலம் தான் சினிமாவில் முதலீடு செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விசாரணையில் இயக்குனருக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிய வந்தால் அவரது நிலைமை மோசமாகிவிடும்.

சினிமா பக்கமே அவரால் தலை வைத்து படுக்க முடியாது. அதோடு இந்த விவகாரம் தெரிய வந்த நிலையில் இயக்குனரின் நெருங்கிய உறவினர்கள் எல்லோரும் அவரின் போன் நம்பரை டெலிட் செய்து விட்டார்களாம். மேலும் இயக்குனரின் இந்த நிலைமைக்கு காரணம் வாரிசு குடும்பம் விட்ட சாபம்தானோ என பேசப்பட்ட வருகிறது.