சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கும் நடிகர் தான் அவர். அதனாலேயே இவரை சுற்றி எப்போதும் மீடியாக்களின் கூட்டம் இருக்கும். இப்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தன் மகனை விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்துவார் என்று கூறப்பட்டது.
அதற்கேற்றார் போல் அவருடைய மகனும் வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பெல்லாம் படித்தார். ஆனால் இடையில் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி, பப் என்று என்ஜாய் செய்து கொண்டிருந்த அந்த வாரிசு ஒரு முக்கிய வழக்கில் மாட்டிக் கொண்டார். மிகப்பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய அந்த செய்தியால் அப்பா நடிகருக்கு ஏகப்பட்ட மன உளைச்சல் ஏற்பட்டது.
தற்போது அந்தப் பிரச்சினை எல்லாம் ஓரளவுக்கு முடிவடைந்த நிலையில் அந்த வாரிசு சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். ஒரு வெப் தொடரை இயக்க ஆர்வம் காட்டி வரும் அந்த வாரிசு இப்போது முழு கதையையும் தயார் செய்து விட்டாராம். விரைவில் அதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் அவருடைய இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் அவருடைய புது அவதாரத்துக்கு அனைவரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் வாரிசு கேமரா முன் நடிக்காமல், பின்னால் இருந்து வேலை செய்ய முக்கிய காரணம் அந்த வழக்கு தானாம்.
அதனால் தான் அவரை வைத்து படம் எடுப்பதற்கு பல தயாரிப்பாளர்களும் தயங்கி இருக்கிறார்கள். அதில் நெருங்கிய சிலரே அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த தயங்கியதால் தான் அவர் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். என்னுடைய திறமை என்ன என்று காட்டிவிட்டு உங்களை என் பின்னால் வர வைக்கிறேன் என்று சபதம் போட்ட அந்த வாரிசு தன் அப்பாவை வைத்து ஒரு படத்தை இயக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.