அரசியல் கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்கும் விதமாக ஹீரோ ஒருவர் சமீபத்தில் அரசியலில் குதித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது அரசியல் கட்சிகளின் பலவீனத்தை அறிந்து சரியான நேரத்தில் தான் ஹீரோ என்ட்ரி கொடுத்துள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் அரசியலைப் பொறுத்தவரையில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு கூட கடினம் தான். ஆனால் மாஸ் ஹீரோ எதுக்கெடுத்தாலும் சட்டென்று கோபப்பட கூடியவர். அதற்கு மேல் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சின்னதாக ஹீரோவை சீண்டினாலும் விடமாட்டார்கள்.
அதுவும் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் இப்போது அதிகம் இருப்பதால் அரசியல் கட்சிகள் ஹீரோவை சீண்ட திட்டம் போட்டு வருகிறார்கள். அதாவது இன்னும் இரண்டு வருடம் கழித்து தான் தேர்தலில் போட்டியிட போவதாக மாஸ் ஹீரோ கூறியிருக்கிறார். ஆகையால் இந்த கட்சி ஆரம்பிப்பதற்கு உள்ளாகவே அளித்து விட வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கின்றனர்.
ஆனால் எல்லாத்திற்கும் தயாராக தான் மாஸ் நடிகர் வந்திருக்கிறாராம். தனது ரசிகர் கூட்டத்தில் பக்காவாக பிளான் போட்டு இருக்கிறார். அதாவது எந்த இடத்தில் கம்முன்னு இருக்கணும், எந்த இடத்தில் குரல் கொடுக்கணும் என்று பக்காவாக பாடம் எடுத்திருக்கிறாராம். சமீப காலமாகவே ஹீரோ செய்யும் ஒவ்வொரு விஷயமும் ட்ரோல் செய்யப்பட்டு தான் வருகிறது.
ஆனால் ஹீரோ எதற்கும் அஞ்சாமல் முழு அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். கண்டிப்பாக இந்த மாற்றம் அவரது கட்சியை வெற்றியடையச் செய்யும் என்ற அரசியல் பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர். மேலும் முதல் தேர்தலிலேயே எதிர்க்கட்சியாக வரக்கூட வாய்ப்பிருக்கிறதாம்.