வாரிசு நடிகரை மணக்கும் ஹீரோயின்.. குடும்ப டார்ச்சரால் எடுத்த முடிவு

பிரபல நடிகை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தாலும் நடிகைக்கு பல பிரச்சனைகள் கணவர் குடும்பத்தில் இருந்து வந்துள்ளது. அரைகுறை ஆடையில் நடிக்க கூடாது என அவரது குடும்பம் கண்டிஷன் போட நடிகைகளுக்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை.

கணவரும் அவரது குடும்பத்தின் பேச்சை கேட்டதால் சண்டை முற்றிப்போக ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து வந்து விட்டார். அதன் பிறகு சினிமாவில் படு கிளாமராக நடித்து வந்த நடிகைக்கு சோதனையாக சில சம்பவங்கள் அரங்கேறியது.

இப்போது நடிகையை திருமணம் செய்து கொள்ள சொல்லி அவரது குடும்பம் டார்ச்சர் செய்து வருகிறார்கள். இனி வரும் நாட்களிலாவது உனக்கு துணை வேண்டும் ஆகையால் நம் உறவினர் பையன் ஒருவரை திருமணம் செய்து கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.

நடிகைக்கு உறவினர் பையனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லையாம். ஆனால் குடும்பத்தின் டார்ச்சர் காரணமாக இப்போது வேறு ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதாவது தன்னுடன் நடித்த வாரிசு நடிகர் ஒருவருடன் இப்போதும் நடிகை தொடர்பில் இருக்கிறாராம்.

ஏற்கனவே இவர்களைப் பற்றி செய்தித்தாள்களில் கிசுகிசுக்கள் வெளியாகி இருக்கிறது. ஆகையால் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு இவரையே பண்ணிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு நடிகை வந்துவிட்டார். ஆகையால் விரைவில் இவர்களது திருமணம் தான் கோலிவுட்டையே ஆச்சரியப்பட வைக்கப் போகிறது.