ஒரு சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தலையை காட்டி வந்த நடிகை ஒருவர் தற்போது சின்னத்திரை பக்கம் கவனத்தை திருப்பிள்ளார். வாய்ப்புகள் இல்லாமல் திருமணம், குழந்தை என்று செட்டிலான நடிகை இப்போது புது வாய்ப்புகள் கிடைத்ததால் ஓவராக ஆட்டம் போட்டு வருகிறாராம்.
ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்தி கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகை அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படுக்கையறை காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார். இதனால் அவர் சில பல சர்ச்சைகளுக்கும் ஆளானார். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகை தனக்கென ஒரு நண்பர்கள் வட்டத்தை வைத்துக்கொண்டு ஓவராக ஆட்டம் போட்டு வந்தார். அந்த வகையில் இடையில் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த நடிகை மீண்டும் தன்னுடைய அட்ராசிட்டியை ஆரம்பித்து விட்டாராம்.
அதாவது நடிகை சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவிடம் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ஒரு அக்கப்போர் நடந்து கொண்டிருப்பதை பார்த்த நடிகை அதை கண்டும் காணாமல் நகர்ந்து விடுகிறாராம்.
ஏனென்றால் அம்மணிக்கு இதெல்லாம் பார்த்து பழகிப் போன விஷயம் தான். ஆனால் அவருடைய கணவருக்கோ மனைவியின் எல்லை தாண்டி போன இந்த சேட்டை கடும் கோபத்தை வரவழைத்து உள்ளதாம். போகிற போக்கை பார்த்தால் இந்த ஜோடி எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறும் என்கிறது அவர்களின் நெருங்கிய நட்பு வட்டாரம்.
அந்த அளவுக்கு அவர் புருஷன், குழந்தைகளை கவனிக்காமல் சூட்டிங் ஸ்பாட்டே கதி என கிடைக்கிறாராம். ஏற்கனவே சில காதல் கிசுகிசுவில் சிக்கி ஒரு வழியாக திருமணம் செய்து செட்டிலான நடிகை கிடைத்த வாழ்க்கையை இப்படி வீணடித்துக் கொள்கிறாரே என்று வருத்தத்துடன் பேசுகிறது சின்னத்திரை வட்டாரம்.