தற்போது சினிமா துறையில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது அதிகமாகி வருகிறது. இதற்கு மறுப்பு சொல்லும் நடிகைகள் அதை வெட்ட வெளிச்சமாக்கி வருகின்றனர். ஆனால் சில நடிகைகள் தங்களின் பொருளாதார தேவைக்காகவும், பட வாய்ப்புகளுக்காகவும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களுக்கு சம்மதிக்கின்றனர்.
ஆனால் விருப்பம் இல்லாமலேயே தன் அம்மாவால் ஒரு நடிகை அட்ஜஸ்ட்மென்டிற்கு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். சினிமாவில் பல சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகை 14 வயதிலேயே அம்மாவின் கட்டாயத்தால் சினிமாவுக்கு நடிக்க வந்தவர்.
படிக்க வேண்டிய வயதில் சினிமாவுக்கு வந்த அந்த நடிகைக்கு திரை உலகம் பல மோசமான அனுபவங்களை கொடுத்திருக்கிறது. அதிலும் அவருடைய தாய் தன்னுடைய கள்ள உறவிற்காக மகளை பணம் சம்பாதிக்கும் ஒரு மெஷினாகவே மாற்றி இருக்கிறார்.
அந்த பணத்திற்காக சில பெரும் புள்ளிகளை அட்ஜஸ்ட் செய்யவும் மகளை கட்டாயப்படுத்தி இருக்கிறார். அம்மாவின் டார்ச்சர் தாங்காமல் நடித்து பணம் சம்பாதித்து கொடுத்த அந்த நடிகை இந்த விஷயத்திற்கு மட்டும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
அதன் பிறகு பல வருடங்கள் தன் குடும்பத்திற்காக உழைத்து சம்பாதித்த அந்த நடிகை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு அந்த நரகத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் நடிகையின் அம்மாவோ பணம் காய்க்கும் மரமாக இருக்கும் மகளுக்கு திருமணமே ஆகக்கூடாது என்று பல வேலைகளை பார்த்திருக்கிறார்.
ஆனாலும் அந்த நடிகை தான் காதலித்தவரையே கரம் பிடித்து இன்று குடும்ப வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இனி மகள் மூலம் பணம் கிடைக்காது என்ற வருத்தத்தில் நடிகையின் அம்மா இப்போது இருக்கிறாராம்.