நடிகையின் வளையில் சிக்கிய ஆடு.. இனிமே கொட்டத்தை அடக்க முடியாது

நடிகை கவர்ச்சி என்றால் படு தாராளம் காட்டி வந்தார். இதனாலேயே பல சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார். ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாத நடிகை தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். இந்த சூழலில் ஒரு பெரிய குடும்பத்துக்கு நடிகை மருமகளாக சென்றார்.

ஆனால் அந்த குடும்பமும் நடிகைக்கு அப்படியே நேர் எதிர். மிகவும் கட்டுக்கோப்பான குடும்பமாக இருந்த நிலையில் நடிகையின் கொட்டத்தை அடக்க முடியவில்லை. தன்னுடைய போக்கு தான் சரி என்று நடிகை ஆட்டம் போட ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு குடும்பம் எவ்வளவோ சொல்லி பார்த்தும் நடிகை கேட்ட பாடு இல்லை.

காதல் கணவரும் ஓரளவுக்கு பொருத்து பார்த்த நிலையில் நடிகையின் நடவடிக்கை நாளுக்கு நாள் மோசமானதால் ஒரு கட்டத்திற்கு மேல் வெறுத்துப் போய் விவாகரத்து செய்துவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகையின் ஆட்டம் இன்னும் அதிகமாக ஆரம்பித்து விட்டது. வெளியில் எல்லோருக்குமே தெரியும்படி சரக்கு அடிக்க ஆரம்பித்து விட்டார்.

அதோடுமட்டுமல்லாமல் உச்சகட்ட கவர்ச்சி உடன் உள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் போட ஆரம்பித்தார். இப்படி இருக்கும் சூழலில் மீண்டும் நடிகையின் வலையில் ஒரு ஆடு சிக்கி இருக்கிறது. அதாவது நடிகைக்கு ஏற்றார் போலையே ஒரு ஆளை வளைத்துப் போட்டிருக்கிறார்.

ஏனென்றால் நடிகை என்ன சொன்னாலும், செய்தாலும் பூம்பூம் மாடு போல் தலையாட்டுவார். இதனால் நடிகையின் கொட்டத்தை இனி யாராலும் அடக்கவே முடியாது. இன்னும் அவரது சமூக வலைதள பக்கத்தில் என்னென்ன மோசமான பதிவை பார்க்க வேண்டுமோ என்ற பதட்டத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →