தன்னைவிட மூன்று வயது அதிகம் இருக்கும் உலக அழகியும் நடிகையும் ஆனவரை காதலித்த திருமணம் செய்து கொண்ட டாப் ஹீரோ, இப்போது அதிரடியான முடிவு எடுத்திருக்கிறார். இவரால் அவருடைய மனைவியின் வளர்ச்சியை பார்த்து, தாங்க முடியவில்லை.
சமீபத்தில் இந்த நடிகை வரலாற்று சிறப்புமிக்க படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் ஆர்வம் காட்டாத நடிகை, இப்போது மறுபடியும் நடிக்க துவங்கி விட்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், 16 வருட திருமண வாழ்க்கையை இப்போது முறித்துக் கொள்ள பார்க்கிறார்கள். இது அந்த அழகி நடிகையின் முடிவு இல்லை என்றாலும், டாப் ஹீரோ தான் விடாபிடியாய் விவாகரத்து வேண்டும் என்று நிற்கிறார்.
திரை உலகில் நட்சத்திர தம்பதியர்களாக எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் வாழ்ந்து வந்த இவர்கள், பிரியப் போகிறார்கள் என தெரிந்ததும் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர். இந்த நடிகை எங்கு சென்றாலும் அவருக்கு தான் ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று அந்த டாப் ஹீரோ பொறாமையில் பொசுகுகிறார்.
இதேப் போன்று இன்னும் நிறைய சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையில் நடந்திருக்கிறது. அதனால் தான் இப்போது 50 வயதிலும் விவாகரத்து செய்ய பார்க்கின்றனர். விவாகரத்துக்கு பிறகு, அழகி நடிகை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் திரை உலகில் ரவுண்டு கட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.