அந்தரங்க விஷயத்தை அவிழ்த்து விட்டது என்னோட தப்பு தான்.. காதலி கழட்டி விட்டதும் வில்லனுக்கு வந்த ஞானோதயம்

50 வயசானாலும் எனக்கு பொம்பள சோக்கு கேக்குது என, 20 வயது இளம் காதலியுடன் சோசியல் மீடியாவில் சில்மிஷம் செய்து கொண்டிருந்த வில்லன் நடிகருக்கு இப்போதுதான் ஞானோதயம் வந்திருக்கு. இளம் பெண்ணுடன் அந்த 50 வயது மூத்த நடிகர் 7 மாதங்களாக ஒரே வீட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்திருக்கிறார்.

சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்த அந்த மூத்த நடிகர், 30 வயது வித்தியாசத்தில் இளம் பெண்ணை கரம் பிடித்தது இளசுகளை வெறியேற்றியது. அதிலும் ஜோடியாக இவர்கள் சமூக வலைதளங்களில் வீடியோஸ் போட்டு 90’s கிட்ஸ்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் வயித்தெரிச்சல் தான் இப்போது அந்த இளம் பெண் மூத்த நடிகரை கழட்டிவிட்டு கிளம்பி விட்டார். இந்த நிலையில் மூத்த நடிகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இளம் பெண் எதனால் தன்னை விட்டு பிரிந்தார் என்பதற்கான விளக்கத்தை அளிக்க விரும்பல.

என்னுடைய உள்ளாடையை நான் தெருவில் கலட்ட விரும்பல என்று சொல்லி ஒரே வார்த்தையில் எல்லாருடைய வாயையும் மூடிவிட்டார்.  நான் ஒரு கண்ணன், என்னை சுற்றி இனி மேலும் பெண்கள் இருப்பார்கள் என்றும் கூறினார்.

அந்த இளம் பெண் அந்த நடிகரிடம் இருந்த பணம் காசுகளை முடிந்த அளவு சுரண்டிவிட்டு கிளம்பி விட்டார். இப்போதுதான் அந்த நடிகருக்கு அந்தரங்க விஷயத்தை வெளிப்படையாக பொதுவெளியில் பேசுவது எவ்வளவு பெரிய தவறு என்பது புரிந்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →