வாயில தான் சனி.. குடும்பத்தால் சிக்கலில் மாட்டிக் கொண்ட வாரிசு நடிகர்

Gossip : பிரைட் நடிகர் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரை ஏழரை சனி ஆட்டிப்படைகிறது. வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் ஒரு முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார்.

ஆனால் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் போகவில்லை. போதாக்குறைக்கு அவரது குடும்பத்தால் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறார்.

அதாவது நடிகர் பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்டப் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் நடிகரின் மனைவி தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவே போட்டு உடைத்தார்.

குடும்பத்தால் சிக்கலில் மாட்டிய நடிகர்

தமிழ் சினிமாவை பற்றி அவர் மோசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகரின் மற்றொரு படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகரின் அப்பா ஓவர் பில்டப் கொடுத்துவிட்டார்.

இதுவும் நடிகருக்கு பேக் ஃபயர் ஆகிவிட்டது. இவ்வாறு குடும்பத்திற்கே வாயில் சனி இருப்பதால் நடிகரை ஆட்டி படைத்து வருகிறது. இதனால் தனது குடும்பத்திடம் கோபத்தை காட்டி உள்ளாராம்.

இனி யாரும் வெளியில் வாயே திறக்க கூடாது என்று ஆர்டர் போட்டு இருக்கிறார். இப்போது வெளியாகும் படம் வெற்றி, தோல்வி என எதை சந்தித்தாலும் அதைப்பற்றி எந்த கருத்துக்களையும் கூறக்கூடாது என்று காட்டன் ரைட் ஆக சொல்லியுள்ளார்.