இரட்டை சவாரி செய்ய நினைத்த நடிகர்.. குடும்ப நடிகைக்கு வீசிய வலை

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு நடிகர் செய்துள்ள விஷயம் தான் இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த அந்த நடிகர் அதன்பிறகு தனது திறமையால் ஹீரோ அந்தஸ்தை பெற்றார். இதற்கான ஒரு தனி ரசிகர் கூட்டம் தொடங்கியது.

பெரிய நடிகர்களின் அளவுக்கு இவரால் பெயர் வாங்க முடியவில்லை என்றாலும் நானும் ஒரு ஹீரோ என்பதை நிலை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் வடநாட்டு நடிகை உடன் ஒரு படத்தில் அந்த நடிகர் ஜோடி போட்டு நடித்தார். இதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர்.

ஆனால் நடிகர் ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அதாவது அவருடன் ரிலேஷன்ஷிப்பில் கவர்ச்சி நடிகை தான் இருந்திருக்கிறார். ஆனால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர் மீது ஹீரோவுக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் குடும்ப குத்து விளக்கு நடிகையிடம் தான் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை சொல்லி இருக்கிறார். ஆனால் அவரோ முகத்துக்கு நேராய் உங்களிடம் அப்படியெல்லாம் பழகவில்லை என்று சொல்லிவிட்டாராம். ஏனென்றால் அந்த நடிகைக்கு இதுபோன்ற விஷயங்கள் சுத்தமாக பிடிக்கவில்லை.

இதனால் மிகுந்த அவமானப்பட்ட நடிகர் அதன் பிறகு அந்த நடிகையின் பக்கம் தலை வைக்கவில்லையாம். அதோடு மட்டுமல்லாமல் சில வருடங்களில் அந்த வடநாட்டு நடிகையையும் கழட்டி விட்டு விட்டார். அதன் பிறகு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த வாழ்க்கையும் பாதியிலேயே முடிவுற்றது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →