டாட்டா காட்டி கழட்டி விட்ட நடிகைகள்.. வயசு போச்சுன்னு சுதாரிச்ச நடிகர்

Gossip : திருமண வயதை கடந்தும் முரட்டு சிங்கிளாக இருந்து வரும் நடிகர் இப்போது ஒரு நல்ல முடிவை எடுத்து இருக்கிறார். அதாவது ஆரம்பத்தில் நல்ல நடிகர் என்று பெயர் வாங்கிய இவர் அதன் பிறகு பல்வேறு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

அதுவும் நேரடியாகவே ஒரு நடிகை தன்னுடன் இந்த ஹீரோ உறவில் இருந்தார் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் நடிகரின் வாழ்க்கையில் பல நடிகைகள் வந்து போய் இருக்கின்றனர்.

தனது பள்ளி பருவத்தில் இருந்து வாரிசு நடிகை ஒருவருடன் நட்பாக பழகி வந்தார். இருவரும் சினிமாவில் நடித்த நிலையில் அது காதலாக மாறியது. ஆனால் இந்த நடிகருடன் சேர்ந்து வாழ முடியாது என நடிகை வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் திருமணத்தில் எடுத்த முடிவு

அதேபோல் வேறு ஒரு நடிகையையும் காதலித்த நிலையில் அவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அவரது கல்யாண நிகழ்ச்சியில் நடிகர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்து இருந்தார்.

இவ்வாறு தான் காதலித்த நடிகைகள் எல்லாம் தன்னை கழட்டிவிட்டு வருவதால் இப்போது சுதாகரித்துக் கொண்டார். அதாவது இதற்கு மேலும் திருமணத்தை தள்ளிப் போட்டால் இனி கல்யாணமே ஆகாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

இதனால் விரைவில் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். இப்பவாவது நல்ல முடிவு எடுத்தீங்களே என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விரைவில் நடிகர் திருமண பத்திரிகை வைக்க உள்ளார்.