நடிகையை டம்மியாக்கிய இயக்குனர்.. ட்ரோலால் கடுப்பான ஹீரோயின்

Gossip : நடிகையுடன் சேர்ந்து சினிமாவுக்கு வந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார்கள். ஆனால் நடிகை தற்போது வரை கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கு அவரது இளமையான தோற்றம் ஒரு காரணம்.

அதோடு மட்டுமல்லாமல் நடிகை தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாததால் அவரது மார்க்கெட் இன்னும் குறையவில்லை. இப்போது உச்ச நட்சத்திரங்களோடு அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகை.

அப்படி நடிகை நடித்த படம் தான் சமீபத்தில் வெளியானது. ஆனால் இயக்குனர் அவரை ஒரு கருவேப்பிலை போல தான் படத்தில் பயன்படுத்துகிறார். ஆனால் கதாநாயகி இல்லாமல் சில காட்சிகளில் வந்த இரண்டு நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றனர்.

சமூக வலைத்தளத்தில் கோபத்தை வெளிப்படுத்திய நடிகை

ஆனால் இந்த நடிகையை படத்தில் நடித்ததே வேஸ்ட் என பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் கடுப்பான அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களை திட்டி பதிவு போட்டிருக்கிறார்.

முகம் தெரியாமல் வீட்டில் இருந்து கொண்டு கோழை போல் இவ்வாறு கமெண்ட் செய்கிறீர்கள். நீங்கள் எப்படி உயிர் வாழ்கிறீர்கள், தூங்குகிறீர்கள் என்று தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளம் வாயிலாக நடிகை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பொதுவாகவே பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிகைகளுக்கு பெரிய அளவில் காட்சிகள் இருக்காது‌. அதேபோல் தான் நடிகை உச்ச நடிகருடன் நடிக்க ஆசைப்பட்ட நிலையில் இயக்குனர் டம்மியாக ஆக்கிவிட்டார்.