அமுல் நடிகையின் வலையில் விழுந்த நடிகர்.. 3வது காதலுக்காக பழைய காதலரை கழட்டிவிட்ட கேவலம்

ஆடையை மாற்றுவது போல் அடிக்கடி காதலரையும் மாற்றிக் கொண்டிருக்கிறார் ஒரு நடிகை. எப்போதுமே சர்ச்சை வளையத்துக்குள் சிக்கி வரும் அந்த அமுல் நடிகை இப்போது அடுத்த பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டு இருக்கிறார். நடிகையின் சினிமா என்ட்ரியே பெரும் சர்ச்சையை தான் கிளப்பியது. அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்து தான் அவர் பிரபலமானார்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை காதல், கல்யாணம் என்று அனைத்திலுமே அவசர முடிவு தான் எடுத்தார். எந்த வேகத்தில் கல்யாணம் செய்து கொண்டாரோ அதே வேகத்தில் சுவரில் அடித்த பந்து போல விவாகரத்தும் செய்து கொண்டார். அதன் பிறகு பிரபல நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்த நடிகை அவரை டீலில் விட்டு விட்டு புளியங்கொம்பாக ஒருவரை பிடித்தார்.

அவருடன் அப்படி இப்படி என்று கொஞ்ச காலம் வாழ்க்கையை ஒட்டிய அம்மணி இப்போது அவரையும் கழட்டிவிட்டு இருக்கிறார். சமீபத்தில் இரண்டாம் காதலருடன் நடிகை படு நெருக்கமாக இருந்த போட்டோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து நடிகை இரண்டாவது காதலரை நண்பர் மட்டும் தான் என்று கூறி அந்த பிரச்சனையை முடித்து வைத்தார்.

ஆனால் நடிகை இப்படி கூறியதற்கு பின்னால் பல அந்தரங்க விஷயங்கள் இருப்பதாக செய்திகள் பரவியது. உண்மையில் இதற்கு பின்னால் இருந்த காரணமே வேறு. நடிகைக்கு புது காதலர் ஒருவர் கிடைத்ததால் தான் இரண்டாவது காதலரை நண்பர் என்று சொல்லி கழட்டி விட்டு விட்டாராம். தற்போது கொஞ்சம் பிஸியாக இருக்கும் நடிகை சக நடிகர் ஒருவரை வளைத்து போட்டு இருக்கிறாராம்.

நடிகையின் கேரக்டர் தெரியாமல் மாட்டிக்கொண்ட அந்த நடிகரை பற்றி தான் இப்போது ஒரே பேச்சாக கிடக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகரோ இது எதுவும் தெரியாமல் நடிகையுடன் இரவும் பகலும் காதல் வசனம் பேசி வருகிறாராம். போர் அடித்தால் காதலரை மற்றும் நடிகை மூன்றாவது காதலரை எப்போது தூக்கி எறிவார் என்று கோடம்பாக்கமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.