டான்ஸ் நடிகரால் ரூட்டு மாறிய நடிகை.. ஐட்டம் ரேஞ்சுக்கு போட்ட ஆட்டம்

நடிக்க வந்த வேகத்திலேயே டாப் ஹீரோக்களின் இஷ்ட நடிகையாக மாறிப்போனார் இவர். ஒரு படமாவது இவருடன் நடித்து விட வேண்டும் என காத்திருந்த ஹீரோக்களும் உண்டு.

அதனாலேயே இவர் ஏகப்பட்ட கிசுகிசுவிலும் சிக்கினார். அதில் இளம் நடிகர் ஒருவருடன் இவருக்கு கூடுதல் நெருக்கம் ஏற்பட்டது. இப்படி சில சர்ச்சைகள் இருந்தாலும் ஹோம்லி நடிகை என்ற பெயருடன் இவர் வலம் வந்தார்.

ஆனால் டான்ஸ் நடிகரின் படத்தில் இவர் போட்ட குத்தாட்டம் இவரை மொத்தமாக மாற்றி விட்டது. அதிலிருந்து நடிகை கவர்ச்சி ரூட்டுக்கு மாற தொடங்கினார்.

அதிலும் ஒல்லி நடிகர் படத்தில் இவர் நடித்த பலான கேரக்டர் பெயர் வாங்கி தந்தாலும் வாய்ப்பை குறைத்து விட்டது. அதை தொடர்ந்து சக நடிகரை திருமணம் செய்து கொண்ட நடிகை சிறிது காலம் நடிப்புக்கு பிரேக் எடுத்தார்.

அதன் பின்னர் மீண்டும் சவாலான கேரக்டர்கள் இவரை தேடி வர ஆரம்பித்தது. தற்போது அதில் கவனம் செலுத்தி வரும் நடிகை சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கல்லா கட்டி வருகிறார்.