திருமணமானவர்களை டார்கெட் செய்யும் நடிகை.. அடுத்தவர் குடும்பத்தை கெடுக்க போடும் திட்டம்

குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமான நடிகை ஒருவர் ஹீரோயின் அந்தஸ்தை பெற்றவுடன் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என இருந்தார். அதன் பிறகு தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் அதிக நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

இளம் பிரபலம் ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு உச்ச நட்சத்திரம் ஒருவரின் கட்டுப்பாட்டில் நடிகை இருந்து வந்தார். இதனால் அந்த டாப் நடிகரின் குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. அதன் பிறகு இப்போது அவர்கள் விவாகரத்து பற்றி பிரிந்து விட்டதாக தகவல் வந்தது.

இதற்கெல்லாம் காரணம் அந்த நடிகை தான் என கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் நடிகை தொடர்ந்து திருமணமானவர்களை டார்கெட் செய்து வருகிறாராம். ஏற்கனவே ஒரு குடும்பத்தை பிரித்த பாவத்தை செய்த நடிகை இப்போது மற்றொரு நடிகர் குடும்பத்தின் தலையில் கையை வைத்துள்ளார்.

அந்த நடிகரோ குடும்பம், குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். அவரின் வாழ்க்கையில் புயலை ஏற்படுத்தி உள்ளார் நடிகை. அதாவது அந்த நடிகரும், நடிகையும் புதிய படத்தில் ஒன்றில் நடித்து வருகிறார்களாம். நடிகையின் அழகில் மயங்கிய அவர் இவருடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறாராம்.

விஷயம் நடிகரின் மனைவியின் காதுக்கு செல்ல பிரச்சனை பூதாகரமாக மாறி உள்ளது. இதனால் அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம். இப்படி நல்லா இருந்த குடும்பத்தை பிரித்து விட்டாரே என நடிகையை சினிமா பிரபலங்கள் கரித்துக் கொட்டி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →