தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் இரு ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் படங்கள் எப்போதும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மீறி, Box Office-ல் பெரும் வெற்றியை பெற்றுள்ளன. ஆனாலும் இவர்களுடைய சில படங்கள் ஏற்ற இறக்கமாக விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இருந்தாலும் வசூல் அளவில் பெரிய நஷ்டம் ஏற்படாத வகையில் ஓரளவுக்கு பூர்த்தி செய்து விடும்.
கமலுக்கு வெற்றி ரஜினிக்கு ஏற்பட்ட சரிவு
அந்த வகையில் கமலுக்கு சமீபத்தில் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்த படம் தான் விக்ரம். அதே மாதிரி ரஜினிக்கு ஜெய்லர் படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ரஜினி லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டு கூலி படத்தில் கமிட் ஆனார். ஆனால் இப்படம் வெளிவந்த பிறகு பெருசாக சொல்லும் படி எதுவும் இல்லை என்று நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றிருக்கிறது.
- லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் வசூலிலும் விமர்சனத்திலும் ஜெயித்து விட்டது.
- கூலி படம் வசூல் அளவில் ஹிட்டானாலும் விமர்சன ரீதியாக சுமார்.
லோகேஷை தள்ளி வைத்து பார்க்கும் ரஜினி
இதனால் லோகேஷ் நமக்கு செட்டாகாது இனி தள்ளி வைத்து பார்க்கலாம் என்று ரஜினி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அது மட்டும் இல்லாமல் லோகேஷ் மிகப்பெரிய கமலின் தீவிர ரசிகர், அதனால் தான் அவருக்கு சூப்பராகவும் நமக்கு சொதப்பலாகவும் முடிந்து இருக்கிறது என்று ரஜினி நம்ப ஆரம்பித்து விட்டார். இந்த சூழ்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயிண்ட் தயாரிப்பில் படம் பண்ண போவதாக கூறியுள்ளார்.
ஆசையை வெளிப்படுத்திய ரஜினி
இதனை தொடர்ந்து ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் இதற்கான இயக்குனர் மற்றும் கதை எதுவும் முடிவாகவில்லை. யார் நல்ல கதை கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு என்று சொல்லியிருந்த நிலையில் நிச்சயம் இந்த வாய்ப்பு லோகேஷ்க்கு கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்து விட்டது.

வாய்ப்பை இழந்த லோகேஷ்
அந்த வகையில் இந்த ஒரு வாய்ப்பை லோகேஷ் கையை விட்டுப் போன நிலையில் லோகேஷ் கேரியரை காலி பண்ணும் விதமாக இளம் இயக்குனருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. அதாவது ரஜினி மற்றும் கமல் 46 வருஷங்களுக்கு பின் இணைந்து நடிக்கப் போகும் படத்தை இயக்குனர் மற்றும் ஹீரோவாக ஜொலிக்கும் பிரதீப் ரங்கநாதன் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாயிருக்கிறது.
பிரதீப்புக்கு அடித்த ஜாக்பாட்
தற்போது பிரதீப் இயக்குனர் பாதையில் இருந்து சற்று விலகி ஹீரோவாக பயணித்தாலும் கமல் மற்றும் ரஜினி மாதிரி இரு ஜாம்பவான்களை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு கிடைப்பதால் கிடைத்த ஜாக்பாட்டை மிஸ் பண்ணாமல் பிரதீப் இவர்களுக்கு ஏற்ற கதையை வைத்து தரமான சம்பவத்தை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.