மாப்பிள்ளை வீட்டில் வரதட்சணை வாங்கிய நடிகை.. இது என்ன புதுசா இருக்கு!

Gossip : பொதுவாகவே பெண் வீட்டார் தான் பணம், நகை என கொட்டி கொடுத்து மணமகனுக்கு கட்டி வைப்பார்கள். ஆனால் புது ட்ரெண்டாக மாப்பிள்ளை வீட்டில் நடிகைக்கு வரதட்சனை கொடுத்து கட்டிக் கொண்டுள்ளார்களாம்.

சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஒரே ஒரு இன்ஸ்டா புகைப்படத்தால் ஃபேமஸானார். இதை அடுத்து அவருக்கு பட வாய்ப்பு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை.

இதனால் இரட்டை கதாநாயகிகள் உள்ள படத்தில் தான் நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மீண்டும் பிரபலமானார். ஆனால் வெள்ளி திரையில் நடிகையால் ஜொலிக்க முடியவில்லை.

வரதட்சனை கொடுத்து நடிகையை கல்யாணம் செய்த பிரபலம்

இந்நிலையில் நீண்ட நாள் காதலரை நடிகை சமீபத்தில் கரம் பிடித்தார். இது இளசுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நடிகையை திருமணம் செய்து கொள்ள நகை, பணம் என வாரி இறைத்துள்ளாராம் மாப்பிள்ளை.

அதோடு திருமணத்தையும் மாப்பிள்ளை பிரம்மாண்டமாக நடத்தி வைத்து விட்டார். இதற்கெல்லாம் காரணம் நடிகை மீது உள்ள காதல் தான். நடிகைக்கு நல்ல அதிர்ஷ்டம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதோடு நடிகையின் குடும்பத்தையும் இப்போது அவரது கணவர் தான் பார்த்து வருகிறார். தனது மாப்பிள்ளை பற்றி பேசி பெருமை கொண்டுள்ளார் நடிகையின் அம்மா.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →