புகழின் உச்சியில் இருக்கும் இந்த நடிகையைச் சுற்றி எப்போதுமே பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அதிலும் நடிகையின் சொந்த வாழ்க்கையை பற்றிய சர்ச்சைகள் மீடியாவில் வெகு பிரபலம். குறுகிய காலத்திலேயே முன்னணி அந்தஸ்தை பிடித்த இந்த நடிகை பெரிய குடும்பத்து வாரிசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திடீரென சில வருடங்களிலேயே இந்த ஜோடி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அதிர்ந்து போன பல பலரும் நன்றாக இருந்த வாழ்க்கையில் என்ன நடந்தது என கேட்டு வந்தனர். இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும் நடிகைக்கு மனதாலும், உடலாலும் நடந்த கொடுமைகள் தான் இந்த முடிவுக்கு காரணமாம்.
வெளியுலகத்திற்கு சிறந்த தம்பதிகளாக இருந்தாலும் இந்த ஜோடியின் தனிப்பட்ட வாழ்க்கை கொஞ்சம் கரடு முரடாக தான் இருந்திருக்கிறது. அதிலும் நடிகையின் கணவர் கோபப்படுவது, சந்தேகப்படுவது என்ன ரொம்பவும் மோசமானவராக நடந்திருக்கிறார். அதன் காரணமாகவே நடிகை ஒரு கட்டத்தில் தன் வயிற்றில் இருந்த கருவையும் கலைத்திருக்கிறார்.
மேலும் இதற்கு பிறகு இந்த கொடுமையை தாங்க முடியாது என முடிவெடுத்த நடிகை தற்போது விவாகரத்து பெற்று சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். இருந்தாலும் நடிகையின் நடவடிக்கை சரியில்லை என பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நெஞ்சமல்ல என்கிறது அவருடைய நட்பு வட்டாரம்.
நடிகை குடும்பம், குழந்தை என்று தான் வாழ ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் கணவரின் மோசமான நடவடிக்கைகள் தான் அவரை விவாகரத்து வரை செல்ல வைத்திருக்கிறது. தற்போது உடல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் நடிகையின் திருமண வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள் அவருடைய ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.