ஓலா, உபர் கூட இவ்வளவு கேக்க மாட்டாங்க.. கிலோமீட்டருக்கு 20 ரூபாய் சம்பளம் கேட்ட பாஸ்கி நடிகர்

பிரபல நடிகர் ஒருவர் பேரம் பேசி சம்பளம் வாங்கியது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமாவை பொறுத்தவரையில் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் என்று பலருக்கும் அக்ரிமெண்ட் போட்டு சம்பளம் பேசப்படும்.

அவர்கள் பேசிய அந்த சம்பளம் மொத்தமாக கொடுக்கப்படும். ஆனால் துணை நடிகர்கள், காமெடியன்கள் ஆகியோர் நாள் ஒன்றுக்கு இவ்வளவு என்று சம்பளம் பேசி வாங்கி கொள்வார்கள். அந்த வகையில் டப்பிங் கலைஞராகவும் காமெடியனாகவும் இருக்கும் பாஸ்கி நடிகர் நாள் கணக்கிற்கு சம்பளம் பெற்று வருகிறார்.

அத்துடன் சேர்த்து அவர் வந்து போவதற்கான செலவையும் கறாராக கேட்டு வாங்கி கொள்கிறாராம். அந்த வகையில் அவர் வீட்டில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு எத்தனை கிலோமீட்டர் வருகிறாரோ அதற்கென்று ஒரு தனி சம்பளம் பேசி வருகிறார்.

எப்படி என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு 20 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அவர் தயாரிப்பாளர்களிடம் கண்டிப்பாக சொல்லி விடுகிறாராம். சமீபத்தில் பிரபல நடிகரின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் கிலோமீட்டர் கணக்குப்படி ஆயிரக்கணக்கில் பணம் கேட்டாராம்.

இதைக் கேட்ட தயாரிப்பாளர் ஓலா, உபர் போன்ற கால் டாக்ஸியில் வந்தால் கூட இவ்வளவு கேட்க மாட்டார்களே என்று அதிர்ந்து போய் இருக்கிறார். இருப்பினும் வேறு வழியில்லாமல் அவர் கேட்ட அந்த தொகையை தயாரிப்பாளர் கொடுத்தாராம்.

காமெடி நடிகரே இவ்வளவு அலப்பறை கொடுத்தால் ஹீரோக்களை பற்றி சொல்லவா வேண்டும். தற்போது அந்த தயாரிப்பாளர் எக்கச்சக்கமாக எகிறிய செலவால் நொந்து போயிருக்கிறாராம்.