1. Home
  2. சினிமா Buzz

பலான காட்சியா டபுள் ஓகே.. நடிகையை தேடி படை எடுக்கும் தயாரிப்பாளர்கள்

பலான காட்சியா டபுள் ஓகே.. நடிகையை தேடி படை எடுக்கும் தயாரிப்பாளர்கள்

தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் அந்த பிரபல நடிகை. தற்போது அவருக்கு பாலிவுட், ஹாலிவுட் என்று எல்லா பக்கங்களிலும் இருந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் அவர் தற்போது ரொம்ப பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும்போதே அந்த வாரிசு நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஒரு நடிகைக்கு திருமணம் ஆனால் அவருக்கு சினிமாவில் மார்க்கெட் சரிந்து விடும் என்ற விதியை மாற்றிக் காட்டியவர் இந்த நடிகை. திருமணத்திற்கு பிறகும் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவர் கணவரின் குடும்பத்துக்காக கவர்ச்சி வாய்ப்புகளை ஏற்காமல் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் பறிபோகும் நிலைமை ஏற்பட்டது. அதனால் சுதாரித்துக் கொண்ட நடிகை தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து அவர் தன்னுடைய இஷ்டம் போல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் இவர் சமீபத்தில் வெளியான படத்தில் போட்ட குத்தாட்டம் பலரின் ஹார்ட் பீட்டை எகிற செய்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு அது போன்ற வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கிறது. நடிகையும் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் பலான காட்சிகளில் நடிப்பதற்கு டபுள் ஓகே சொல்லி வருகிறாராம். இதனால் தற்போது அவரை தேடி பல தயாரிப்பாளர்களும் படையெடுத்து வருவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.