பெற்ற குழந்தையை மறைத்து காதலனை ஏமாற்றிய அந்த நடிகையை பற்றி தான் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே பிரபல சேனலில் நடிக்கும் நடிகை தன் கணவர் மீது அடுக்கடுக்கான புகார்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்.
மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த விஷயத்தில் தற்போது நடிகையின் கணவரான அந்த ஹீரோவும் தன் பங்குக்கு அடுக்கடுக்கான புகார்களை கூறிக் கொண்டிருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் தற்போது ஒருவர் மீது ஒருவர் இவ்வளவு குற்றங்களை சுமத்துவது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.
அதிலும் நடிகையின் கணவர் தெரிவித்துள்ள பல விஷயங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறி தான் நடிகரை காதலித்திருக்கிறார். ஆனால் உண்மையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் அதிகாரப்பூர்வமான விவாகரத்தை பெற்றிருக்கிறார்.
முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே ஐந்து வருடங்களாக நடிகருடன் அவர் உறவில் இருந்துள்ளார். இதுவே அதிர்ச்சியை கிளப்பிய நிலையில் தற்போது நடிகைக்கு 7 வயதில் ஒரு குழந்தை இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த குழந்தையை தன் காதலனிடம் உறவினரின் குழந்தை என்று அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதை நம்பிய காதலனும் நடிகையுடன் ஐந்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார். தற்போது நடிகையின் குட்டு ஒவ்வொன்றாக வெளிப்படவே அவரின் கணவர் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்து விட்டாராம்.
இதுதான் நடிகையை கோபப்படுத்தி இருக்கிறது என்றும், கைக்கு கிடைத்த வாழ்க்கையை விட மனமில்லாமல் தான் அவர் போலீஸ் வரை சென்றிருப்பதாகவும் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது இருவரிடமும் போலீசார் அடுத்தடுத்த விசாரணை மேற்கொண்டு வருவதால் விரைவில் உண்மை வெளிப்படும் என்று கூறுகின்றனர்.