தற்போது திரை உலகில் வசூல் ராஜாவாக இருக்கும் அந்த நடிகரை வைத்து படம் எடுப்பவர்கள் அவரை பாக்ஸ் ஆபிஸ் கடவுளாகவே பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு அவருடைய படங்களுக்கு எக்க சக்க மவுசு இருக்கிறது. அவர் ஒரு படம் நடிக்கிறார் என்று சொன்னாலே பூஜை போடும்போதே வியாபாரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் நடிகரின் முந்தைய திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு கலெக்ஷனை பெறவில்லை. அது மட்டுமல்லாமல் படம் குறித்த பல நெகட்டிவ் விமர்சனங்களும் நடிகரை கடும் அப்செட் ஆக்கியது. இருந்தாலும் படம் நஷ்டம் இல்லை என்று தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டது.
அதை அடுத்து நடிகரின் அடுத்த படம் உடனே பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகும் அந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. மேலும் முந்தைய திரைப்படத்தின் நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக நடிகரும் படப்பிடிப்பு தளத்தில் அதிக கெடுபிடி காட்டினாராம்.
அதற்காகவே இயக்குனர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வந்த நிலையில் தற்போது படத்தின் வியாபாரம் பற்றி தான் திரை உலகில் ஒரே பேச்சாக இருக்கிறது. பட ரிலீஸ் பற்றி அறிவிப்பு வந்ததுமே படத்தின் வியாபார விசயமும் வெளியில் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்தது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு ரிலீசுக்கு முன்பே இந்த படம் படுஜோராக வியாபாரம் ஆகி இருக்கிறது.
இது பலருக்கும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் உண்மையில் இந்த வியாபாரத்திற்கு பின்னணியில் நடிகர் மறைமுகமாக காய் நகர்த்தியது தற்போது தெரியவந்துள்ளது. ஏனென்றால் முந்தைய பட நஷ்டத்தை வைத்து இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் பலரும் தயங்கி வந்திருக்கிறார்கள்.
இதனால் பயந்து போன நடிகர் தன்னுடைய ஆஸ்தான தயாரிப்பாளரை வைத்து சொந்த காசை போட்டு இந்த படத்தை பல கோடிக்கு வாங்கி விட்டாராம். தனக்கு இருக்கும் மாஸ் இடத்தை தக்க வைத்துக் கொள்ள தன் படத்தை தானே வாங்கிய நடிகரை பற்றி தான் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.