ருசி கண்ட பூனை விடுமா.? மீண்டும் பிரபலத்தின் மனைவியுடன் தொடர்பில் இருக்கும் ஹீரோ

Gossip: ஹீரோ இப்போது தான் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமா வளர்ச்சியடைந்து வருகிறார். அவரின் பேருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் ஒரு பெரிய பூகம்பம் வெடித்தது.

சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒருவரின் மனைவியுடன் ஹீரோயின் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்பட்டது. இதனால் தனது மனைவியையும் அந்த பிரபலம் விவாகரத்து செய்து விட்டார்.

இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டது எனது குழந்தைகளுக்காக தான் என்றும் கூறினார். இந்த செய்தி பூதாகரமாக, நடிகர் பக்கம் இருந்து எந்த மறுப்பும் வரவில்லை. ஆனால் நடிகரின் குடும்பமும் பாதிக்கும் என்று கூறப்பட்டது.

பிரபலத்தின் மனைவியுடன் மீண்டும் தொடர்பில் உள்ள ஹீரோ

ஆனால் அவர்கள் இப்போதும் சந்தோஷமாகத் தான் இருந்து வருகின்றனர். இப்போது சங்கதி என்னவென்றால் விவாகரத்து செய்த பிரபலத்தில் மனைவியுடன் மீண்டும் தொடர்பில் இருக்கிறாராம் ஹீரோ.

அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்த இவர்கள் இருவருக்கும் இப்போது பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது ஹீரோ கடைசியாக நடித்த படம் பெரிய ஹிட் ஆன நிலையில் அவரது மார்க்கெட் வேற லெவல் உயர்ந்துள்ளது.

இதனால் இனி நாம் சந்திக்க வேண்டாம், அது வேறு பிரச்சனையாகி கேரியருக்கே பாதிப்பு ஏற்படும் என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால் பெரிய தொகை கொடுக்க வேண்டும் என்று பிரபலத்தில் முன்னாள் மனைவி கேட்டிருக்கிறார்.

இல்லையென்றால் நாம் இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் கேட்ட தொகையை கொடுக்க நடிகர் முன்வந்திருக்கிறாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment