முரட்டு குடியால் கேரியரை தொலைத்த நடிகை.. விட்ட இடத்தை பிடிப்பதற்காக எடுத்த சபதம்

Gossip: தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளசுகளையும் தன் வசப்படுத்தியவர் தான் இந்த நடிகை. இவர் இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

தெலுங்கில் அறிமுகமாகி அதன் பின் தமிழில் தமாஷ் நடிகருடன் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு இளைஞர்களின் பேவரைட் ஹீரோயின் ஆக மாறினார். அதன் பின்பு  தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று பீக்கில் இருந்த போது அம்மணி,  சினிமா வாழ்க்கையை தானே அழித்துக் கொண்டார்.

சில வருடத்திற்கு முன்பு மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் போதையில் முகம் சுளிக்கும்படி மோசமான ஆட்டம் போட்டு உள்ளார். அங்கிருந்த பலர்  எடுத்துக் கூறியும் கேட்காத அந்த ஹோம்லி நடிகை, போதை தெளிந்த பின்பு தான் தன்னுடைய ஆட்டத்தை எல்லாம் ஆடி முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அன்று அவர் போட்ட ஆட்டம் தான் அவரது சினிமா கேரியரையே தொடைத்து தூர போட்டு விட்டது. இப்போது நடிகைக்கு பட வாய்ப்புகளை இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் அவரை ரசிகர்கள் மறக்கவே இல்லை. அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும்  தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை இனிமேல் குடிக்கவே மாட்டேன் என சபதம் எடுத்துள்ளார். அதோடு ஹோம்லி நடிகை மீண்டும் விட்ட இடத்தைப் பிடித்து, முன்னணி நடிகையான பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும்  அதிரடியான முடிவு எடுத்துள்ளார். 

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →