பொதுவாகவே தொகுப்பாளினியாக இருக்கும் பெண்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அதில் முக்காவாசி பேர் விவாகரத்து பெற்று தான் இருக்கிறார்கள். அவ்வாறு சமீபகாலமாகவே பிரபல தொகுப்பாளனி தனது கணவரை பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது.
ஏனென்றால் அவர் எங்கு சென்றாலும் தனிமையாக அல்லது அவரது அம்மா குடும்பத்துடன் செல்லும் படியாக தான் பார்க்க முடிந்தது. இதனால் அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் தொகுப்பாளனி இதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை.
இந்த சூழலில் இப்போது அவருக்கு விவாகரத்து உறுதியாகி இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. சமீபத்தில் யூடியூப் சேனலில் பேட்டி கொடுக்கும் போது தனது கணவரை விட்டு பிரிந்ததை பற்றி தொகுப்பாளினி பேசி இருந்தார். ஆனால் இவர்களின் விவாகரத்திற்கான காரணம் என்ன என்று தெரிய வந்துள்ளது.
அதாவது இவர்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. ஆரம்பத்தில் சில வருடங்களில் குழந்தை பிறந்துவிடும் என சர்வ சாதாரணமாக இருந்துள்ளனர். அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன் மருத்துவரை அணுகி உள்ளனர்.
அப்போது தொகுப்பாளினியின் கணவருக்கு தான் பிரச்சனை இருப்பது தெரிந்துள்ளது. ஆனாலும் இவர் இதைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். கணவரின் குடும்பத்தினர் தொகுப்பாளினியை மோசமாக பேசும்போது கணவர் தனக்கு ஆதரவாக எதுவுமே பேசவில்லை என்ற விரக்தியில் அவரை விட்டு பிரிந்து விட்டாராம்.