ரவி மோகனுடன் தோழி முகமூடியை போட்டிருக்கும் கெனிஷா.. உண்மையான காரணம் இதுதான்

Ravi Mohan: வீட்டுப் பிரச்சினை வெளியே தெரியாத வரை, ரவி மோகனுக்கு ரசிகர்களிடம் நல்ல மதிப்பு மரியாதையும் இருந்தது. ஆனால் எப்பொழுது வீட்டு பிரச்சனை சோசியல் மீடியாவுக்கு வந்ததோ அப்பொழுதே ரவி மோகன் மீது நாலு பக்கமும் விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரவி மோகன் உடனடியாக ஜெனிஷாவை அறிமுகப்படுத்தும் விதமாக எல்லா நிகழ்ச்சிக்கும் கூட்டிட்டு வர ஆரம்பித்து விட்டார்.

இன்னொரு பக்கம் ரவி மோகனுடன் விவாகரத்து வேண்டுமென்றால் மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற ஆர்த்தி கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் இவ்வளவு பணம் என்னால் கொடுக்க முடியாது என்று மறுத்த நிலையில் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு இடையான விவாகரத்து தாமதமாகி வருகிறது.

சட்டப்படி முதல் மனைவியுடன் விவாகரத்து வாங்காமல் இரண்டாவது கல்யாணம் பண்ண முடியாது என்பதை தெரிந்து கொண்ட ரவி மோகன் அவருடைய காதலி, கெனிஷாவை தோழியாக தற்போது அனைத்து இடங்களிலும் அறிமுகப்படுத்தி வருகிறார். தற்போது ரவி மோகன் துவங்கிய தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு பார்ட்னராக கெனிஷா இணைந்திருக்கிறார்.

அப்பொழுது மேடைக்கு கூப்பிடும் பொழுது கூட ரவி மோகனின் தோழி கெனிஷா என்றுதான் கூப்பிட்டு இருந்தார்கள். இதற்கு காரணம் முறைப்படி விவாகரத்து வாங்கிய பிறகுதான் காதலி மனைவியாக வெளியே அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக ரகசியமாக அவர்களுடைய முகமூடியை போட்டிருக்கிறார்கள். இவர்கள் முறைப்படி கணவன் மனைவியாக வேண்டும் என்றால் ஆர்த்தி மனசு வச்சால் தான் முடியும் என்பதற்கு ஏற்ப ஜீவனாம்சம் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

இன்னொரு பக்கம் ரவி மோகன் மாதிரி தனுஷ் பெயரும் அடிபட்டு வருகிறது. அதாவது தனுஷ் விவாகரத்து வாங்கிய பிறகு அவருடைய தோழியை அனைவருக்கும் மனைவியாக அறிமுகப்படுத்துவார் என்று வதந்திகள் வருகிறது. அந்த வகையில் தனுசுக்கும் ஒரு தோழி கிடைத்திருக்கிறார். அதே மாதிரி முறைப்படி விவாகரத்து வந்த பிறகு தோழி மனைவியாக மாறுவார் என்று சொல்லப்படுகிறது.