மலையாள ஹீரோ பிடியில் இருக்கும் நடிகை.. வாய்ப்பு இல்லாததால் பெரிய இடத்தை வளைத்து போட்ட சம்பவம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு சென்ற நடிகை ஒருவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் அவதிப்பட்டு வந்தார். பெரும்பாலும் அந்த நடிகைக்கு செகண்ட் ஹீரோயின் சப்ஜெக்ட் தான் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. மேலும் நடித்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதனால் தமிழ் சினிமாவே வேண்டாம் என மலையாள பக்கம் சென்று விட்டார். அங்கு ஒரு சில படங்களில் நடித்த நடிகை பிரபல நடிகர் ஒருவருக்கு வலை விரித்துள்ளார். அவரும் நடிகையின் வலையில் சிக்க, அவரை வைத்தே இப்போது நினைத்ததை எல்லாம் சாதித்து வருகிறாராம்.

மேலும் மகள் வயது உடையவர் அந்த நடிகை என்றாலும் ஹீரோ ஓவர் நெருக்கம் காட்டி வருவது படக்குழு தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எதை பற்றியும் கவலைப்படாத ஹீரோ நடிகையை விழந்து விழுந்து கவனித்து வருகிறாராம். அவரே கதியென காலடியில் விழுந்து கிடக்கிறாராம்.

அதுமட்டுமின்றி நடிகர் பெரிய இடம் என்பதால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களிடம் இந்த நடிகை வைத்து படம் எடுக்குமாறு சிபாரிசு செய்து வருகிறாராம். இதனால் நடிகைக்கு இப்போது அக்கட தேசத்தில் நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறதாம்.

இளமை உள்ள போதே எல்லாத்தையும் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என நடிகை ஹீரோவை வைத்து பல சொத்துக்களையும் வாங்கி போட்டு உள்ளாராம். இதையெல்லாம் தெரியாமல் குடும்பம், குட்டி இருந்தும் நடிகையின் மாயப்பிடியில் சிக்கி உள்ளார் ஹீரோ.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →