Gossip: கடந்த சில வருடங்களாக மாஸ் ஹீரோ வீட்டு விவகாரம் கிசுகிசுவாக பரவி வருகிறது. மூன்றெழுத்து நடிகையுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் மனைவி அவரை பிரிந்து விட்டார் என பேசப்பட்டது.
இப்போதும் கூட அந்த சர்ச்சை அப்படியே தான் இருக்கிறது. இதில் எரியுற தீயில் எண்ணெய் ஊற்றும் கதையாக நடிகை வேறு தேவையில்லாத வேலையை நடிகரின் பிறந்த நாளின் போது பார்த்து விடுவார்.
அப்ப எல்லாமே உண்மைதான் என உறுதியாகவே செய்திகள் வந்தது. ஆனால் நடிகர் தரப்பில் இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர் தனியாகவே கலந்து கொண்டு அந்த சர்ச்சையை அதிகப்படுத்தினார்.
மாஸ் ஹீரோ வீட்டில் நடந்த பார்ட்டி
ஆனால் இந்த செய்தி எல்லாமே வெறும் வதந்தி தான் என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது நடிகர் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது மனைவியும் மகளும் வெளிநாட்டிலிருந்து வந்து வீட்டிலேயே பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட உறுதியான தகவல் தான் இது. மகள் படிப்பின் காரணமாகத்தான் நடிகரின் மனைவி வெளிநாட்டில் இருக்கிறாராம். மற்றபடி குடும்பத்தில் எந்த பிரச்சனையும் கிடையாது என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் நடிகரின் எதிரிகள் இந்த தீயை அணைய விடாமல் பார்த்துக் கொள்கின்றனர். அதனால்தான் தேவையில்லாத சர்ச்சை வந்து கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் விவாகரத்து, நடிகை உடன் நெருக்கம் என் எந்த செய்தியும் உண்மை இல்லை என்பது தெளிவாகி விட்டது.