தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் இசையமைப்பாளர்.. கால்கட்டு போட நினைக்கும் பெற்றோர்

இசையமைப்பாளர் சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்து விட்டார். கடுகு சிறுத்தாலும் காரம் பெருசு என்பது போல் ஆளுக்கும் அவரது திறமைக்கும் சம்பந்தமே இருக்காது. ஒருபுறம் திறமை இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் விளையாட்டு பிள்ளையாக இருந்து வருகிறார்.

இசையமைப்பாளரின் கால்ஷீட் கிடைக்காதா என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காத்துக் கிடக்கிறார்கள். அவர்களை எல்லாம் டீலில் விட்டுவிட்டு நடிகைகளுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஏற்கனவே தன்னைவிட வயதில் மூத்த நடிகை ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

இதனால் அவர்களது பெற்றோர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர். இதைத்தொடர்ந்து சிறிது வருடங்களிலேயே நடிகையை இசையமைப்பாளர் பிரிந்து விட்டார். இதனால் அவரது பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் அதன் பின்பும் அவரின் லீலைகள் ஓய்ந்த பாடில்லை.

எந்த நடிகை அல்லது பாடகி உடனும் இசையமைப்பாளர் நீண்ட காலம் இருந்ததில்லை. இப்படியே போனால் அவ்வளவுதான் அவருக்கு சீக்கிரம் கால்கட்டு போட்டு விட வேண்டும் என்று பெரிய இடத்தில் பெண் தேடும் பணியில் இசையமைப்பாளரின் பெற்றோர்கள் இறங்கி இருக்கிறார்களாம்.

ஆனால் திருமணம் செய்து கொண்டால் சுதந்திரம் பறிபோய்விடும் என்ற பயத்தில் இசையமைப்பாளர் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார். இரண்டு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று இசையமைப்பாளர் கூறிவரும் நிலையில் இந்த வருடமே கால் கட்டு போட்டு விட வேண்டும் என்ற முடிவுக்கு பெற்றோர்கள் வந்து விட்டார்களாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →