Gossip: மாமி நடிகை இப்போது செம அப்செட்டில் இருக்கிறாராம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்தவருக்கு தோல்விதான் மிஞ்சியது.
அதனால் சில வருடங்கள் கைவசம் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார். ஆனால் அந்த வரலாற்று படம் அவருடைய மார்க்கெட்டை தூக்கி விட்டது. போதாக்குறைப்பு நடிகையும் மினு மினு என ஜொலிக்க ஆரம்பித்தார்.
இந்த வயதிலும் இவ்வளவு அழகா இருக்கிறாரே என டாப் ஹீரோக்களின் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மாஸ் ஹீரோ படத்தை அடுத்து ரேஸ் நடிகர் உடன் இரு படங்களில் நடித்தார்.
அதிர்ச்சியில் நடிகை
ஆனால் அந்த கேரக்டர்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இதற்கு இடையில் ஒரு படத்தில் ஐட்டம் டான்ஸ் வேறு ஆடி இருந்தார். ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் தற்போது அவர் நடித்த படத்தின் கதாபாத்திரம் இருக்கிறது.
வேர்ல்டு நடிகர் படத்தில் அவருடைய கேரக்டர் இப்படியா என பலரும் முகம் சுளிக்கின்றனர். இதுக்கு நடிகை வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். தொடர்ந்து இப்படியான கேரக்டரில் நடிக்கிறாரே என வெளிப்படையாகவே பேச தொடங்கி விட்டனர்.
இப்படியே போனா அவருடைய மார்க்கெட் அவ்வளவுதான் என்ற ரீதியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்காத நடிகை நொந்து போய் இருக்கிறார்.