அடுத்த 6 மாசம் நம்ம ராஜ்ஜியம் தான்.. சம்பளத்தை கொட்டிக் கொடுத்து பிரபலத்தை லாக் செய்த சேனல்

சின்னத்திரையில் சூரிய சேனலுக்கு போட்டியாக இருக்கும் சேனல் புது புது யுக்திகளை செய்து வருகின்றனர். அதில் உச்ச ஹீரோவை வைத்து நடத்தும் அந்த ரியாலிட்டி ஷோவுக்கு டிஆர்பியில் எப்போதுமே முதலிடம் தான்.

அதே போன்று கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் மற்றொரு ரியாலிட்டி ஷோவுக்கும் ரசிகர்கள் வட்டம் அதிகம். அதனாலயே பல சீசன்களாக அந்த ஷோ வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த சீசன் ஒருவழியாக முடிந்த நிலையில் அடுத்த சீசனை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு தூணாக இருந்த பிரபலம் தற்போது அதை விட்டு விலகி இருக்கிறார்.

இதனால் அந்த நிகழ்ச்சியில் தொடங்குமா என்ற சந்தேகம் ஆடியன்சுக்கு இருந்தது. ஆனால் விசாரித்ததில் சேனல் தரப்பு மிகப்பெரும் பிரபலம் ஒருவரை புக் செய்து விட்டதாம்.

இதற்காக அவருக்கு பல லட்சம் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரபலங்களின் வீட்டு விழாக்களின் நாயகனாக இருக்கும் இந்த பிரபலம் தான் தற்போது அந்த சமையல் நிகழ்ச்சியின் நடுவராம்.

இதன் மூலம் அடுத்த ஆறு மாசத்திற்கு டிஆர்பியை வசப்படுத்திவிடலாம் என்று சேனல் தரப்பு ப்ளான் போட்டு இருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட போட்டி சேனல் தற்போது என்ன வியூகத்தை செய்யப் போகிறார்கள் என்று ஆவலும் ஏற்பட்டுள்ளது.