காதல் கணவருக்கு துரோகம் செய்த நடிகை.. விவாகரத்துக்கு தயாராகும் நட்சத்திர ஜோடி

Gossip: சினிமாவில் பேய் சீசன் ஆரம்பித்தது போல் இப்போது விவாகரத்தை சீசன் ஆரம்பித்துள்ளது. ஒன்று அடுத்தடுத்து கல்யாணம் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது இல்லையென்றால் விவாகரத்து செய்தி வருகிறது.

இதுதான் இப்போது கோலிவுட்டில் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இசை ஜோடியின் விவாகரத்து அதிர்வலையை கிளப்பியது. அதை அடுத்து மற்றொரு நடிகர் மனைவியை பிரியப் போகிறார் என பேசப்பட்டது.

விவாகரத்துக்கு தயாராகும் ஜோடி

அந்த லிஸ்டில் தற்போது ஒரு நட்சத்திர ஜோடி இணைந்துள்ளது. போல்டான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான அந்த நடிகை சினிமா பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களுடைய திருமண வாழ்க்கையில் இப்போது விரிசல் விழுந்துள்ளதாம். இதற்கு முக்கிய காரணம் நடிகையின் மாடன் கலாச்சாரம் தான். நைட் பாட்டிக்கு செல்வது என்றால் நடிகைக்கு அவ்வளவு இஷ்டம்.

நடிகையின் கணவரும் இதற்கெல்லாம் தடை சொல்வதில்லை. ஆனால் நைட் பார்ட்டிக்கு சென்றபோது நடிகைக்கு வேறு ஒருவரின் நட்பு கிடைத்திருக்கிறது. அது நெருக்கமாக மாறிய நிலையில் எல்லை மீறி சென்று விட்டதாம்.

இதை கண்ணால் பார்த்த கணவர் இப்போது பயங்கர அப்செட்டில் இருக்கிறார். நடிகை இதெல்லாம் சகஜம் என்று கணவரிடம் சொன்னாலும் அவர் இப்போது விவாகரத்து செய்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். கூடிய விரைவில் இந்த ஜோடியின் விவாகரத்து செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →