சின்னத்திரையை பொருத்த வரையில் நடிகர், நடிகைகளை காட்டிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு மவுசு அதிகம் அந்த வகையில் பிரபல சேனல் ஒன்றின் தொகுப்பாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த சேனலில் பல நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கும் அந்த தொகுப்பாளினிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. கணீர் குரலும், குழந்தைத்தனமான பேச்சும் அவரை வெகு பிரபலமாக்கியது. இதனால் தற்போது அந்த சேனலின் முக்கிய தொகுப்பாளர்கள் பட்டியலில் அவர் முன்னிலையில் இருக்கிறார்.
இப்படி பிசியாக இருக்கும் அவருக்கு சொந்த வாழ்வில் தற்போது ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாம். சமீபகாலமாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறாராம். காரணம் என்னவென்றால் ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட தன் காதல் கணவரை விட்டு அந்த தொகுப்பாளினி இப்போது பிரிந்து வாழ்ந்து வருகிறாராம்.
இது சின்னத்திரை வட்டாரத்தில் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அவர் தன்னுடைய குடும்ப விஷயத்தைப் பற்றி வெளியில் தெரியாத வண்ணம் கமுக்கமாக மூடி வைத்து வருகிறாராம். இருப்பினும் தொகுப்பாளினியின் சில செயல்பாடுகள் அவற்றை வெளிப்படையாக காட்டிக் கொடுத்து விட்டது.
சமீபத்தில் அவரின் இத்தனை வருட சாதனையை அந்த சேனல் கொண்டாடியது. அந்த நிகழ்வில் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் அதே சேனலில் வேலை பார்க்கும் அவருடைய கணவர் மட்டும் வரவே இல்லை. இதன் மூலம் அவர் தன்னுடைய கணவரை பிரிந்தது கிட்டத்தட்ட உறுதி ஆகிறது.
ஏற்கனவே அந்த சேனலின் முக்கிய இரண்டு தொகுப்பாளினிகள் திருமணம் செய்த வேகத்திலேயே கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அந்த லிஸ்டில் தற்போது இந்த தொகுப்பாளினியும் இணைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லாம் அந்த சேனலில் ராசி தான் என்று ரசிகர்கள் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக புலம்பி வருகின்றனர்.