Premji: இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையை கொண்ட கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் அப்பாவைப் போல சினிமாவில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரம் சற்று வித்தியாசமாகவும் இவரின் நடிப்பை மறக்க முடியாத அளவிற்கு ஒரு டயலாக்கை முக்கியமாக வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.
ஆனாலும் சர்ச்சையில் இவர் பெயர் அடிப்படாமல் இருந்ததே இல்லை, அதுவும் ப்ளே பாய் என்று சொல்லும் அளவிற்கு லீலைகளின் மன்னனாக இருந்தார். 44 வயதிலும் திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருந்தார். கடைசியில் ஒரு வழியாக கடந்த வருடம் ஜூன் மாதம் திருத்தணியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ரொம்பவே சிம்பிளாக இவருடைய திருமணம் நடந்து முடிந்து விட்டது.
இதனை தொடர்ந்து மனைவியுடன் சேர்ந்து நிறைய போட்டோக்களையும் வீடியோக்களையும் அப்டேட் பண்ணிட்டு வந்த பிரேம்ஜி பற்றி தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. நேற்று அவருடைய இன்ஸ்டாகிராமில் 4.44 என்று பதிவு போட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு வேலை பிரேம்ஜி அப்பாவாக இருப்பாரோ என்று நினைத்து வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்குள் அப்பாவாகிய பிரேம்ஜிக்கு சோசியல் மீடியா மூலம் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து 44 வயசு வரை முரட்டு சிங்கிளாக இருந்தாலும் கல்யாணம் ஆகி ஒரு வருடத்திற்குள் காரியத்தை சாதித்து விட்டார் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள். ஆனால் இதற்கு பிரேம்ஜி எந்தவித பதிலும் கொடுக்காமல் இருப்பதால் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.