Gossip : டாப் நடிகர்களில் ஒருவராக இல்லை என்றாலும் தனக்கான ரசிகர் கூட்டத்தை இந்த நடிகர் பெற்று இருக்கிறார். சமீபகாலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றி கொண்டிருந்தார். ஆனால் கடைசியாக அவர் நடித்த நான்கு, ஐந்து படங்கள் தொடர் தோல்வியை தழுவியது.
அதுவும் குறிப்பாக கடைசியாக வெளியான படத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டது. ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பு உடன் இருந்த நிலையில் படுமோசமான தோல்வி அடைந்து மண்ணை கவ்வியது. பெரிய பட்ஜெட் என்பதால் தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.
இப்போது உச்ச நடிகர் நடித்துள்ள அடுத்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆனால் கடைசியாக வெளியான படம் சரியாக போகாததால் இந்த படத்தின் பிசினஸ் பெரிய அளவில் போகவில்லை. விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கவே தயங்குகிறார்களாம்.
நடிகரால் சிக்கலில் உள்ள தயாரிப்பாளர்
சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் லாபத்தை கொடுப்பதில்லை. அண்மையில் நடிகர் ஒருவரின் படம் வெளியான நிலையில் கதை இல்லை என்றாலும் மக்களை என்டர்டைன்மெண்ட் செய்யும் அளவிற்கு படத்தை இயக்குனர் கொண்டு சென்றிருந்தார்.
அதனால் படம் நல்ல வசூலை அள்ளியது. அவ்வாறு ஹீரோ நடித்திருக்கும் படம் என்டர்டைன்மென்ட் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனாலும் படத்தின் பிசினஸ் தற்போது வரை டல் அடித்திருக்கிறதாம்.
ஆனால் படத்தைப் பார்த்த சில பிரபலங்கள் இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று கூறுகிறார்கள். ஆகையால் ரிலீசுக்கு பிறகு படம் பிக்கப் ஆகி நல்ல வசூலை பெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது பிசினஸ் ஆகாததால் தயாரிப்பாளர் பெரும் கவலையில் இருக்கிறார்.