எதிர்நீச்சல் 2: குணசேகரன் வீட்டு மருமகள்களை முன்னேற விடாமல் தடுக்கும் எமனாக மாறி வருகிறார். அதற்கு அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் இப்பொழுது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு முழு சைக்கோவாக மாறி புது ரூட்டில் டார்ச்சர் செய்து வருகிறார்.
பழையபடி மருமகள்களை வீட்டிற்கு கொண்டு வந்து வேலை சொல்லியே அடக்கி ஆள்கிறார். அவர்கள் அடுப்பாங்கரையில் கஷ்டப்படுவதை மறைமுகமாக நின்று பார்த்து ரசிக்கிறார். இப்படி நாளுக்கு நாள் அவரது டார்ச்சர்கள் அதிகரித்து வருகிறது. இதனை தெரிந்தும் ஒரு விதமான பாசத்தால் கூடி வாழ்கிறார்கள் வீட்டு மருமகள்கள்.
குணசேகரனை விட ஒரு படி மேலே சென்று விசாலாட்சி அம்மையார் அவர் பங்கிற்கு கஷ்டங்களை கொடுத்து வருகிறார். நான்கு சேலைகளை கொடுத்து கையால் துவைக்கும் படி கட்டாயப்படுத்துகிறார். குணசேகரன் பங்கிற்கு அவருடைய வேஷ்டி சட்டையை கொண்டு வந்து இதையும் துவைக்கும் படி அழுத்தம் கொடுக்கிறார்.
இதை அனைத்தும் வாஷிங் மிஷினில் போடக்கூடாது,பழைய உருப்படி கைகளால் துவைக்க வேண்டும், இல்லாவிட்டால் கிழிந்து விடும் என செக் வைக்கிறார். இதுவரை இல்லாமல் இதை ஜனனியிடம் சொல்லுகிறார். டக்குனு கோபப்பட்ட ஜனனி, அத்தை சேலையை துவைப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. உங்களுடைய ஆடையை துவைக்க முடியாது என காட்டம் காட்டுகிறார்.
ஆடிப்போன குணசேகரன் நான் உனக்கு அப்பா மாதிரி என மலுப்புகிறார். சுதாரித்துக் கொண்ட நந்தினி, “ஜனனி அவள் வேலையை பார்க்கட்டும் நான் துவைத்து தருகிறேன் என பிரச்சனையை சுமூகமாக முடிக்கிறார். இப்படி முழு சைக்கோவாக மாறி துணிகளை துவைத்ததை கண்டு உள்ளுக்குள் ஆனந்தப்படுகிறார் பரோல் பாண்டியன் குணசேகரன்.