ரஜினிக்கு வில்லனாக இந்த 3 பேர்க்கு வாய்ப்பு? அதுல ஒருத்தர் நம்மாளு
தமிழ் சினிமாவின் அடுத்த மிகப்பெரிய கவன ஈர்ப்பாக மாறியிருக்கும் Thalaivar173 படத்தைச் சுற்றி ரசிகர்கள் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இயக்குநர் ராம்குமார், அனிருத் கூட்டணி என்பதாலேயே ஹைப் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக நடிக்க வில்லன் யார் என்பதே சூடான விவாதமாக மாறியுள்ளது. புதிய தகவல்படி, வில்லன் லிஸ்டில் மூன்று பிரபலமான நடிகர்கள் இருக்கிறார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பறக்கின்றன.
Thalaivar173 படத்தின் கதைக்களம் முழுக்க action drama நிறைந்ததாக இருக்கும் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், ரஜினிகாந்தின் screen presence-க்கு சமமாக நிற்க வில்லன் character சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. இதனால், production குழு South, Bollywood இரண்டு தரப்பிலிருந்தும் வலுவான நடிகர்களை shortlist செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
முதலாவது பெயர் SJ சூர்யா. இவர் சமீபத்திய படங்களில் காட்டிய தீவிரமான villainous acting, body language செய்து அவரை Thalaivar173 க்கு perfect antagonist ஆக்குகிறது. Fans கூட அவர் ரஜினியுடன் மோதினாலேயே தீப்பொறிகள் பறக்கும் என்று பேசுகின்றனர்.
இரண்டாவது பேச்சில் இருக்கும் பெயர் Arjun Rampal. Bollywood-ல் பல intense மற்றும் stylish negative roles-ல் பிரகாசித்தவர். சமீபத்தில் South movies-ல் நடித்த அனுபவம் காரணமாக, Pan-India audience-க்கும் connect ஆகக்கூடிய வில்லன் என்ற வகையில் அவர் consider செய்யப்படுகிறார். ரஜினி ரம்பால் மோதல் visual scale-ஐ அதிகரிக்கக்கூடும்.
மூன்றாவது பெயர் Vivek Oberoi. இவர் South, Hindi இரண்டிலும் வலுவான antagonistic characters ல் நடித்தவர். Web series-களிலும் அவர் காட்டிய screen command காரணமாக, Thalaivar173 வில்லன் லிஸ்டில் அவரும் இருப்பதாக film circles சொல்கின்றன. ஒரு mature, வில்லன் ரோல்க்கு விவேக் ஓபராய் சூப்பர் என கூறப்படுகிறது.
சரியான வில்லன் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த 3 heavy names SJ Suryah, Arjun Rampal, Vivek Oberoi—லிருந்து ஒருவரை finalize செய்வதாகக் கூறப்படுவதால் ரசிகர்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளது. இறுதியாக யார் ரஜினிகாந்துடன் இந்த mega project-ல் மோதப் போகிறார்கள் என்பதை production எந்த தருணத்திலும் அறிவிக்கலாம். உங்களுக்குப் பிடிச்ச வில்லன் யார்?
