கூமாபட்டிக்கு மருமகளாக போகும் சீரியல் நடிகை.. நவம்பர் மாதத்தில் திடீர் கல்யாணம்

koomapatti thangapandi: ஏங்க என்ற வார்த்தையே ட்ரெண்டாக்கிய கூமாபட்டி தங்கபாண்டி யூடியூப் மூலம் பிரபலமானார். ஏங்க கூமாபட்டி நாங்க தான், வேற யாரும் கிடையாது. இது எங்களுடைய உலகம் என்று சொல்லும் விதத்தில் இவருடைய கிராமம் அனைவரும் தெரியும்படி அமைந்தது.

இதனை தொடர்ந்து ரீல்ஸ் மூலம் பிரபலமான தங்கப்பாண்டி, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சிங்கிள் பசங்க ஷோவில் கலந்து கொண்டு வருகிறார். இதில் இவருக்கு ட்ரெய்னிங் கொடுக்கும் விதமாக ஜோடியாக அமைந்திருக்கும் சீரியல் நடிகை யார் என்றால் பல முன்னணி சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்திலும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிக்கு ஜோடியாக நடித்து வரும் சாந்தினி பிரகாஷ் தான்.

இவர்களுடைய டான்ஸ் மற்றும் செயல்கள் அனைத்தும் வீடியோ மூலம் பிரபலமானதால் தற்போது கூமாபட்டியில் இருந்து சிங்கிள் பசங்க மூலம் ட்ரெண்ட் ஆகி வருகிறார். தற்போது தங்கப்பாண்டி மற்றும் சாந்தினி இருவரும் கொடுத்த இன்டர்வியில் பேசும் பொழுது ஜோடியாக கலக்கி வரும் சாந்தினி பார்த்து, என் கூட வந்து ஒரு வாரம் இரு. நவம்பர் மாதத்தில் நம்முடைய கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

இதைக் கேட்டு சாந்தினியும் பெரிசாக ரியாக்சன் கொடுக்காமல் இருப்பதை பார்க்கும் பொழுது ஒருவேளை இவர்கள் இருவருக்கும் மனம் ஒத்துப் போய்விட்டதோ, கூமாபட்டிக்கு மருமகளாக போய்விடுவார் என்று சொல்லப்படுகிறது. திண்ணையில் இருந்தவருக்கு திடீர் கல்யாணமா என்று சொல்லும் வகையில் சோசியல் மீடியாவில் தற்போது கூமாபட்டி தங்கபாண்டி ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

சாந்தனியும், தங்கப்பாண்டியினை பாராட்டும் வகையில் இவரை பார்ப்பதற்கு தான் கோமாளியாக இருக்கிறார். ஆனால் விட்டால் இந்த உலகத்தையே ஆளக்கூடிய அளவுக்கு திறமை இருக்கிறது என்று பாராட்டி வருகிறார். அந்த அளவிற்கு கூமாபட்டி தங்க பாண்டியனை சாந்தினி புரிந்து வைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ரீல் செய்யும் அட்ராசிட்டிக்கு மக்கள், கூமாபட்டிக்கு வந்த வாழ்வு என்று சொல்லி இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.