சம்பளத்தை உயர்த்தி சிக்கலில் மாட்டிய நடிகை.. சூதானமாக தெறித்து ஓடிய தயாரிப்பாளர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த இளம் நடிகை. பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவரும் நடிகைக்கு தற்போது கைவசம் ஏராளமான படங்கள் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் நடிகையை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர். நடிகை தற்போது தமிழில் விவாகரத்து நடிகர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதனால் அவர் தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளார். ஏற்கனவே கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை தற்போது தன்னை படங்களில் புக் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் இன்னும் ஒரு கோடி அதிகமாக வேண்டும் என்று கூறுகிறாராம்.

இதனால் ஆடி போன பல தயாரிப்பாளர்கள் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்கிறார்களாம். மேலும் சில தயாரிப்பாளர்கள் யோசித்து சொல்கிறோம் என்று காலத்தை கடத்தி வருகிறார்களாம். இதனால் அதிகபட்ச சம்பளம் வாங்கி செட்டில் ஆகலாம் என்று நினைத்த நடிகைக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.

இப்படி சம்பளத்தை அதிகப்படுத்தியதால் தனக்கு கிடைக்க இருந்த பட வாய்ப்புகளும் குறைந்து போனதை எண்ணி அவர் மிகுந்த கவலையில் இருக்கிறாராம். இப்ப யோசித்து என்ன பிரயோஜனம் என்று நடிகையை பற்றி தற்போது திரையுலகில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →