அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி

தற்போதைய காலகட்ட சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரவு அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் தற்போது ஹீரோவாக களம் இறங்கிஅசத்தி வருகின்றனர். அதேபோன்று தற்போது மாஸ் ஹீரோவாக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அந்த நடிகரின் மகனும் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.

அதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடிகரின் மகன் குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவை கலக்கி வருகின்றது. எப்போது அவர் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

மேலும் அவ்வப்போது அவர் சம்பந்தப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் என்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தது. இந்நிலையில் மகனை சினிமாவில் இறக்கி விட துடிக்கும் நடிகர் அதற்கான வேலைகளை மிக மிக ரகசியமாக செய்து வருகிறாராம்.

இதற்காக ஒரு குழுவே தனிப்பட்ட முறையில் செயல்பட்டு வருகிறது. அவர்கள் நடிகரின் வாரிசுக்கு எப்படி எல்லாம் நடிக்க வேண்டும், வசன உச்சரிப்பு ஆகியவை பற்றி முறையாக கற்றுக் கொடுத்து வருகிறார்களாம். அப்பாவை போன்று நன்றாக டான்ஸ் ஆட கூடிய வாரிசு தற்போது இன்னும் சில பல பயிற்சிகளையும் எடுத்து வருகிறாராம்.

இன்னும் சில வருடங்களில் அப்பாவுக்கு இணையான கெத்துடன் அவர் மாஸ் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதுவரை அவருக்கு கொடுக்கப்படும் பயிற்சி குறித்து எந்த தகவலும் வெளியில் கசிய கூடாது என்று நடிகர் கண்டிப்பாக சொல்லிவிட்டாராம். இருப்பினும் அந்த விஷயம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவில் கசிந்து வருகிறது.