பல வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்கும் மூத்த இயக்குனர் தான் அவர். தற்போது அவர் படங்கள் இயக்குவதில்லை என்றாலும் தயாரிப்பிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். வெளி உலகில் மரியாதையான மனிதராக வலம் வரும் இவர் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் வீக்.
இப்படித்தான் ஒருமுறை சீரியல் நடிகை ஒருவரை தன்னுடைய படத்தில் ஹீரோயினாக நடிக்க வைப்பதற்கு அணுகி இருக்கிறார். அதனால் அவரை சந்திக்க வந்த அந்த நடிகையிடம் சம்பளம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அவர் பேசி இருக்கிறார். அப்போது அவர் அந்த நடிகையை தொட்டு தொட்டு பேசி தன்னுடைய எண்ணத்தை மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்.
அப்பா வயதில் இருக்கும் அந்த இயக்குனரை தவறாக நினைக்காத அந்த நடிகை அவரிடம் பேசிவிட்டு கிளம்பி இருக்கிறார். பிறகு அவருக்கு போன் செய்த இயக்குனர் நீங்கள் கேட்ட சம்பளத்தை விட அதிகமாக கொடுக்கிறேன். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று தன் புத்தியை காட்டி இருக்கிறார்.
இதனால் பதறிப்போன அந்த நடிகை கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு தேவையில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனாலும் விடாத அந்த இயக்குனர் கொஞ்சம் டைம் எடுத்து யோசித்து சொல்லுங்கள். எப்போது வேண்டுமானாலும் எனக்கு போன் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.
திரை உலகின் மறு முகத்தை கண்ட அந்த நடிகை எனக்கு சின்ன திரையே போதும் என்று தற்போது பிரபல சேனலின் முக்கிய சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஏற்கனவே ஒன்றிரண்டு திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இந்த நடிகைக்கு ஹீரோயின் ஆக வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருக்கிறது.
ஆனால் தன்னுடைய திறமையால் மட்டுமே உயர வேண்டும் என்று நினைக்கும் அந்த நடிகை இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்புகளை ஏற்பதில்லை. என்றாவது ஒருநாள் தனக்கான வாய்ப்பு நிச்சயம் தேடி வரும் என்று அவர் நம்பிக்கையோடு காத்து கொண்டிருக்கிறாராம்.