Gossip: சின்னத்திரை சேனல்கள் புதுசு புதுசா யோசித்து நிகழ்ச்சி நடத்தினால் தான் டிஆர்பியை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதில் அந்த இரண்டு சேனல்களுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.
அதில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன அந்த சேனல் பல வருடமாக நடத்தி வரும் நிகழ்ச்சியை புதுமைப்படுத்தி இருக்கிறது. மார்க்கெட் இல்லாதவர்களை நடுவராக அழைத்து வருவது தான் இப்போது ட்ரெண்ட்.
ஆனால் வில்லனாக பிசியாக நடித்து வரும் அந்த நடிகரை அழைத்தது தான் ஏன் என்று தெரியவில்லை. இயக்குனர் வில்லன் இசையமைப்பாளர் பாடகர் என பல பரிமாணங்கள் இவருக்கு உண்டு.
இங்கிதம் இல்லாதவருக்கு சங்கீதமா
நல்ல திறமைசாலி என்றாலும் பல இடங்களில் இங்கிதம் தெரியாமல் பேசிவிடுவார். அதனாலயே சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வதும் உண்டு. இவரை அந்த டிவி சேனல் டிஆர்பிக்காக அழைத்து வந்து இப்போது படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார்களாம்.
நிகழ்ச்சியில் இந்த நடிகர் செய்த அட்ராசிட்டி கொஞ்ச நஞ்சம் கிடையாது. எதற்கு வந்தோமோ அந்த வேலையை விட்டுவிட்டு மற்ற எல்லா சேட்டையும் செய்கிறாராம் அவர். சங்கீத நிகழ்ச்சியில் நடனத்தை பார்த்து ரசித்திருக்கிறார் இந்த வில்லன்.
பாட்டுப்பாடும் மேடையில் கூட்டத்தில் ஆடிய ஒரு பெண்ணை பாராட்டி தள்ளியதோடு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என வாக்கும் கொடுத்திருக்கிறார். இப்படி அந்த நிகழ்ச்சியின் நோக்கத்தையே மாற்றி விட்டாராம்.
இதனால் உடன் இருந்த மற்ற நடுவர்கள் கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்து இருக்கின்றனர். நிகழ்ச்சி தரப்பும் கூட இனிமேல் இவரை வைத்து நிகழ்ச்சியை தொடரலாமா அல்லது ஏதாவது காரணம் சொல்லி தூக்கி விடலாமா என்று யோசிக்கும் நிலையில் இருக்கிறதாம்.