இந்திய சினிமாவையே தன் பிடிக்குள் வைத்திருந்த நடிப்பு அரக்கன் தான் அந்த நடிகர். பல வருடங்களாக சினிமா துறையில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினார். அதன் காரணமாகவே அவருக்கு முன்னணி அந்தஸ்தும் மிக விரைவிலேயே கிடைத்தது.
இப்படி கோலிவுட் சினிமாவில் தன் திறமையை நிரூபித்த இவர் பாலிவுட் திரையுலகிலும் வெற்றிக்கொடி நாட்டினார். ஒரு கட்டத்தில் இவருடைய அசுர வளர்ச்சியை பார்த்து பயந்து போன பாலிவுட் நடிகர்கள் எப்படியாவது இவரை ஓரம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கு ஒரு வலுவான காரணமும் இருந்திருக்கிறது.
அதாவது இந்த நடிகரின் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படம் பாலிவுட்டில் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை ஓடி சாதனை படைத்திருக்கிறது. இதை பார்த்து மிரண்டு போன முன்னணி நடிகர்கள் அப்போது ஹிந்தி திரையுலகை தன் கட்டுக்குள் வைத்திருந்த நிழல் உலக தாதாவிடம் இது பற்றி கூறியிருக்கின்றனர்.
உடனே அவரும் சம்பந்தப்பட்ட நடிகரை பயங்கரமாக மிரட்டி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவரை திரும்பவும் கோலிவுட் பக்கமே அனுப்புவதற்கு பல சதி வேலைகளும் நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் நடிகர் ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு தமிழிலேயே கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
அதன் பிறகு குறிப்பிட்ட சில வருடங்களிலேயே நடிகர் இந்திய சினிமாவே வியக்கும் அளவுக்கு முன்னேறி காட்டினார். காற்றுக்கு அணை போட முடியாது என்பதற்கு ஏற்ப இந்த நடிப்பு சூறாவளியும் இப்போது உலக அளவில் தன்னை நிரூபித்து இன்றைய தலைமுறையினரை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இவரைப் போன்று இங்கிருந்து பாலிவுட் பக்கம் சென்ற மணியான இயக்குனரும் அந்த தாதாவால் மிரட்டப்பட்டிருக்கிறார். இருந்தாலும் அவர் பாலிவுட்டில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார். இப்பொழுதும் கூட முன்னணி நடிகர்கள் இவருடைய படங்களில் நடிக்க தவம் கிடக்கின்றனர். ஏனென்றால் இப்போது பாலிவுட்டின் நிலைமை எப்படி சரிந்து போயிருக்கிறது என்பது பலருக்கும் தெரியும்.