1. Home
  2. சினிமா Buzz

அம்மா பேச்சை கேட்டு காதலியை கைகழுவிய நடிகர்.. உச்சகட்ட விரக்தியில் தவிக்கும் நடிகை

அம்மா பேச்சை கேட்டு காதலியை கைகழுவிய நடிகர்.. உச்சகட்ட விரக்தியில் தவிக்கும் நடிகை

Gossip: ரொம்பவும் ஸ்வீட்டான அந்த நடிகைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அக்கட தேசத்தில் அறிமுகமானாலும் அவர் தமிழ் திரையுலகிலும் தன் ஆளுமையை காட்டி வெகு விரைவிலேயே முன்னணி இடத்தை பிடித்தார்.

இவருடன் நடிக்க வேண்டும் என காத்துக் கிடந்த நடிகர்களும் ஏராளம்.. இப்படி பிசியாக நடித்து வந்த அம்மணி ட்ரெண்டிங் நடிகர் ஒருவரின் காதலில் விழுந்தார். இருவரின் ஜோடி பொருத்தமும் சினிமாவில் மட்டுமல்ல நேரிலும் அவ்வளவு அழகு.

பொது விழாக்களில் கூட இவர்கள் சேர்ந்து கலந்து கொண்டால் மீடியாக்களுக்கு சரியான தீனி தான். இருவரும் காதலிக்கிறார்கள் ரகசிய குடுத்தனம் நடத்துகிறார்கள் என்ற விஷயம் கூட மீடியாவில் தீயாக பரவியது.

காதலியை கழட்டி விட்ட நடிகர்

அதற்கேற்றார் போல் காதும் காதும் வைத்த மாதிரி தங்களுடைய காதலை வளர்த்து வந்தது இந்த ஜோடி. ஆனால் நடிகை ஒரு படத்தில் எடுத்த விஷ பரிச்சை அவருக்கே பாதகமாக முடிந்துவிட்டது.

இதனால் நடிகர் கொஞ்சம் கொஞ்சமாக காதலியிடம் இருந்து விலக ஆரம்பித்தார். ஆனால் இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. நடிகை வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் ஹீரோவின் குடும்பத்தினர் இது சரிப்பட்டு வராது என சொல்லி இருக்கின்றனர்.

அம்மா செல்லமான நடிகரும் எப்படியோ காதலியை கை கழுவி விட்டார். இதனால் அப்செட்டில் இருந்த நடிகை தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். கைவசம் சில படங்களை வைத்திருக்கும் இவர் மீண்டும் காதலருடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார்.

ஆனால் இந்த விவகாரம் நடிகரின் காதுக்கு சென்று நோ சொல்லிவிட்டாராம். இவர்களை வைத்து படம் எடுக்க இருந்த இயக்குனரும் தயாரிப்பாளரும் கூட இப்போது இதனால் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.