திரையுலகை பொருத்தவரை ஒரு திரைப்படம் வெற்றி அடைந்து விட்டால் அதே கூட்டணி மீண்டும் அடுத்த படத்தில் இணைவது புதிதல்ல. ஆனால் அந்த கூட்டணி மீண்டும் அதே போன்ற ஒரு வெற்றியை கொடுக்குமா என்பது சந்தேகம்தான். அப்படித்தான் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் கூட்டணி மீண்டும் அடுத்த திரைப்படத்தில் இணைந்திருக்கிறது.
இத்தனைக்கும் அந்த நடிகருக்கும் இயக்குனருக்கும் படப்பிடிப்பு தளத்திலேயே ஏகப்பட்ட சண்டை நடந்திருக்கிறது. இதனால் படம் எப்போது முடியும் என்று படக்குழுவினர் விழி பிதுங்கி போய் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கிடையில் மாட்டிக்கொண்ட தயாரிப்பாளர் தான் பாவம் படாத பாடு பட்டிருக்கிறார்.
இப்படி பல காலமாக இழுத்தடித்துக் கொண்டே வந்த அந்த திரைப்படம் ஒரு வழியாக வெளியாகி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இப்படம் வெளிவருவதற்கு முன் அதே நாளில் போட்டியாக களமிறங்கிய இளம் ஹீரோவின் படத்தை நினைத்து படக்குழுவினரே பயத்தில்தான் இருந்தனர். ஆனால் எதிர்பார்த்தது போல் இல்லாமல் அந்த போட்டி ஹீரோவின் திரைப்படம் மண்ணை கவ்வியது.
இதனால் இப்படம் தற்போது லாபகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை பார்த்து மகிழ்ந்து போன ஹீரோ தன்னுடைய பழைய பகையை எல்லாம் மறந்துவிட்டு இயக்குனருக்கு சமாதான தூது விட்டிருக்கிறார். இதற்காகவே காத்திருந்த டைரக்டரும் நடிகரிடம் பேசி அடுத்த படத்திற்கான சம்மதமும் வாங்கி விட்டாராம்.
அதேபோல தயாரிப்பாளரையும் சம்மதிக்க வைத்த இயக்குனர் தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். ஆனால் ஹீரோ என்னதான் பழசை மறந்தது போல் சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் இயக்குனரின் மேல் இருக்கும் கோபம் இன்னும் குறையவில்லையாம்.
இதை தெரிந்து கொண்ட இயக்குனரும் அடுத்த படத்தில் நடிகரை வச்சு செய்ய காத்திருக்கிறாராம். அதற்காகவே ரிவென்ஞ் எடுப்பது போல் அவர் ஸ்கிரிப்டையும் தயார் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.